விரத நாட்களில் ஏன் உப்பில்லாமல் உணவு சமைக்க வேண்டும்?

By Sakthi Raj Oct 28, 2026 03:00 PM GMT
Report

 பொதுவாக, அன்றாட உணவுகளில் உப்பு இல்லை என்றால் நிச்சயம் அந்த உணவை நாம் எடுத்துக் கொள்ள முடியாது. அந்த வகையில், உப்பு என்பது உணவின் சுவையை தீர்மானிக்கிறது.

"உப்பில்லா பண்டம் குப்பையிலே" என்ற பழமொழியும் இருக்கிறது. உணவிற்கு சுவையை கொடுக்கக்கூடிய உப்பை நாம் குறைத்துக் கொள்வதற்கு நம் முன்னோர்கள் ஒரு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். அதை பற்றி பார்ப்போம்.

விரத நாட்களில் ஏன் உப்பில்லாமல் உணவு சமைக்க வேண்டும்? | Why Shouldnt We Add Salt During Fasting

அலவண நியமம் என்றால் என்ன?

விரத நாட்களின் பொழுது உப்பில்லாமல் உணவு சமைத்து சாப்பிடுவது என்பது ஆன்மீக மரபுகளில் கடைபிடிக்கப்படும் ஒரு முக்கியமான வழக்கமாகவே இருக்கிறது. இந்த கட்டுப்பாட்டிற்கு 'அலவண நியமம்' என்று பெயர்.

கோவிலில் முடி காணிக்கை கொடுக்கும் பொழுது இந்த தவறுகளை செய்து விடாதீர்கள்

கோவிலில் முடி காணிக்கை கொடுக்கும் பொழுது இந்த தவறுகளை செய்து விடாதீர்கள்

அலவணம் என்றால் உப்பு இல்லாதது என்று பொருள். விரத நாட்களில் உணவை தவிர்ப்பது மட்டுமல்ல உணவு பழக்கங்களுடன் நம்மளுடைய அன்றாட ஆசைகளையும் கட்டுப்படுத்தக்கூடியதை குறிக்கக் கூடியதாக இருக்கிறது.

விரத நாட்களில் ஏன் உப்பில்லாமல் உணவு சமைக்க வேண்டும்? | Why Shouldnt We Add Salt During Fasting

அந்த வகையில், உணவில் சுவைக்காக சேர்க்கக்கூடிய இந்த உப்பையும் தவிர்ப்பது என்பது சில விரத முறைகளில் ஒரு பகுதிகளாகவே பார்க்கப்படுகிறது. இருப்பினும் வயதானவர்கள் விரத நாட்களில் உப்பை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தால் நிச்சயமாக மருத்துவர் ஆலோசனை செய்து பிறகு தீர்மானிப்பது சரியானதாக இருக்கும்.

மேலும், உப்பு இல்லாமல் உணவு சாப்பிடுகின்ற பொழுது நமக்கு வாழ்க்கை ரீதியாக சந்திக்கக்கூடிய தோஷமும் குறைகிறது. 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US