சம்சாரம் போனால் சகலமும் போச்சு.. ஜோதிடத்தின் முக்கியமான ரகசியம்
நம்முடைய நடைமுறை வாழ்க்கையும் ஜோதிட வாழ்க்கையும் மிகப் பெரிய அளவில் தொடர்பு உடையது. ஜோதிடத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள் "சம்சாரம் போன சகலமும் போச்சு" என்று அதாவது ஜோதிடத்தில் சம்சாரம் என்பது வாழ்க்கையில் அஸ்திவாரமாகவும் அச்சாணியாகவும் விளங்கக்கூடிய மனைவியை குறிக்கிறது.
காரணம், ஜாதகத்தில் இல்லற வாழ்க்கை சிறப்பாக அமைந்தால் மட்டும் தான் அந்த நபருக்கு மகிழ்ச்சியும் எல்லா செல்வ வளங்களும் கிடைக்கும். அப்படியாக ஜோதிடத்தில் மனைவியை குறிக்கக் கூடிய கிரகமாக சுக்கிர பகவான் இருக்கிறார்.

அதனால் ஒருவருடைய ஜாதகத்தில் சுக்கிர பகவான் பலம் பெற்று இருந்தால் மட்டுமே அவர்களுக்கு லட்சுமி கடாட்சம் எந்த தடையும் இன்றி கிடைக்கும். அதே போல், ஒரு ஆண் ஜாதகத்தில் சுக்கிர பகவான் பலம் பெற்று இருந்தால் அவருடைய மனைவி மகிழ்ச்சியாகவும் செல்வச் செழிப்புடனும் வாழ்வார். அதேபோல் ஜோதிடத்தில் ஏழாம் பாவகம் என்று சொல்லக்கூடிய களத்திர ஸ்தானம் மிகவும் முக்கியமானதாக உள்ளது.
ஏழாம் இடம் என்பது நம்முடைய வாழ்க்கை துணையை மட்டும் அல்ல அன்றாடம் சந்திக்க கூடிய மக்களை, செய்கின்ற வேலை, நண்பர்களையும் உணர்த்துகிறது. ஆதலால் ஒருவருக்கு ஏழாம் பாவகம் பாதிக்கப்பட்டிருக்கும் பொழுது அவருக்கு சமூக உறவுகளில் நல்லிணக்கணத்தையும் பாதிக்கும், பொருளாதார கஷ்டங்கள் இன்ப துன்பங்கள் போன்ற சூழ்நிலை உருவாகும்.
அதேபோல் ஜாதகத்தில் தாயைக் குறிக்கக் கூடிய கிரகமாக சந்திரன் இருக்கிறார். தாய்க்கு பின் தாரம் என்பதால் ஜாதகத்தில் சந்திரனும் பாதிக்கப்படாமல் இருப்பது அவசியமாகும்.
இங்கு ஒரு விஷயத்தை நாம் சரியாக கவனித்து பார்த்தால் ஒரு வீட்டில் மனைவி சரியாக இல்லாத பொழுது அந்த கணவன் மகிழ்ச்சி அற்றதாகவும் தொழிலுக்கு செல்லும் இடங்களில் கவலை இழந்து தொழிலில் கவனம் செலுத்த முடியாமல் போகக்கூடிய நிலை வருவதால் தான் "சம்சாரம் போனால் சகலமும் போச்சு" என்று ஜோதிடத்தில் குறிப்பிட்டார்கள்.

அதைவிட முக்கியமாக எந்த ஒரு குடும்பத்தில் மனைவியை சரியான முறையில் வழி நடத்துகிறார்களோ மரியாதை கொடுக்கிறார்களோ அவர்களுடைய குடும்பத்திலும் மகாலட்சுமி கடாட்சம் நிறைந்து இருக்கும்.
ஜோதிடம் ஒரு பலவீனமாக இருந்தாலும் மனைவிக்கு நல்ல முறையில் கணவன் அன்பையும் மரியாதையும் கொடுக்கும் பொழுது அவனுக்கும் இயல்பாக லட்சுமி கடாட்சம் தேடி வரும் என்பதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |