இந்த 3 ராசியில் பிறந்த பெண்கள் மனைவியாக கிடைத்தால் அதிர்ஷ்டமாம்
ஒரு பழமொழி சொல்வார்கள், அதாவது கணவன் மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று. அப்படியாக உண்மையில் கணவன் மனைவி அமைவது இறைவன் கொடுத்து வரமே தான். காரணம் நம்மை புரிந்து கொண்டு நடக்கக்கூடிய துணை வாழ்க்கையாக அமைவது என்பது ஒரு பெரும் அதிர்ஷ்டமாக நம் வாழ்க்கையை மாற்றுகிறது.
அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசியில் பிறந்த பெண்கள் தங்களுடைய கணவனின் சொல்லை தட்டாத பெண்களாக இருப்பார்களாம். இந்த ராசியில் பிறந்த பெண்கள் ஒருவருக்கு மனைவியாக அமையும் பொழுது அந்த நபருக்கு திருமணத்திற்கு பிறகு பெரும் அதிர்ஷ்டம் கிடைத்து வளர்ச்சி அடைவதாக சொல்லப்படுகிறது. அவர்கள் எந்த ராசி பெண்கள் என்று பார்ப்போம்.

ரிஷபம்:
சுக்கிர பகவானின் ஆட்சி பெற்ற ரிஷப ராசி பெண்கள் எல்லாவற்றையும் அனுசரித்து போகக் கூடியவர்கள். இவர்கள் ஒரு குடும்பத்திற்கு மருமகளாக செல்லும் பொழுது அந்த குடும்ப சூழ்நிலையை அறிந்து அதற்கு தகுந்தார் போல் இவர்களை மாற்றிக்கொண்டு அந்த குடும்பத்தினுடைய வளர்ச்சிக்கு இவர்களுடைய பங்கு அளிப்பதால் அந்த குடும்பத்தின் வளர்ச்சி இவர்கள் சென்ற பிறகு இன்னும் பல மடங்கு அதிகரிக்கிறது. மேலும் குடும்பத்தில் சிலர் இவர்களைப் பற்றி வைக்கக்கூடிய விமர்சனத்தை இவர்கள் பெரிய அளவில் எடுத்துக் கொள்ளாத நபராக இருப்பதால் மகிழ்ச்சியான சூழல் எப்பொழுதும் இருக்கிறது.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்த பெண்கள் எல்லாவற்றையும் தீர ஆராய்ந்து செயல்படக்கூடிய நபராக இருந்தாலும் குடும்பத்திற்கு இவர்கள் எப்பொழுதும் அதிக அளவில் முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதாவது குடும்பத்திற்காகவே தங்களை அர்ப்பணித்து செயலாற்றக்கூடியவர்களாக இருப்பார்கள். மேலும் துலாம் ராசியில் பிறந்த பெண்கள் மருமகளாக அமையும் பொழுது அந்த வீட்டில் எப்பொழுதும் மகிழ்ச்சியான சூழல் இருக்கும். காரணம் இவர்கள் வீட்டில் இருக்கக் கூடிய ஒவ்வொரு நபரையும் புரிந்துகொண்டு அவர்களுக்கு தகுந்தாற்போல் அனுசரித்து செல்வதில் சிறந்தவர்களாக இருப்பார்கள்.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்த பெண்கள் எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு செல்லக்கூடிய ஒரு அற்புதமான மன அமைப்பு கொண்டவர்கள். இவர்களை குடும்பத்தினர் எவ்வளவு சீண்டினாலும் அவர்களைப் புரிந்து கொண்டு அனுசரித்து பிறகு அந்த நபரையே தன்வசப்படுத்தி மகிழ்ச்சியான சூழலை உருவாக்க கூடியவர்கள். தனுசு ராசியில் பிறந்த பெண்கள் குடும்பம் என்று வரும் பொழுது எல்லா விஷயத்தையும் பெரிது படுத்தாமல் விடுவதால் குடும்பத்தில் இவர்கள் மருமகளாக செல்லும் பொழுது எல்லாவற்றையும் சமாளித்து ஒரு அற்புதமான சூழலை உருவாக்குகிறார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |