கல்வி அறிவு பெருக சரஸ்வதி தேவியை இந்த நாளில் வழிபட்டால் போதும்
இந்து மதத்தை பொறுத்தளவில் அன்னை சரஸ்வதி அறிவு, இசை மற்றும் கலையின் தெய்வம் என்று அழைக்கப்படுகிறார். வேதங்களின் முதன்மை தெய்வமாகவும் கருதப்படுகிறாள்.
அன்னை சரஸ்வதி சாரதா, பிரம்மச்சாரிணி, ஜகன்மாதா போன்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறார். வேத அறிவைப் பாதுகாப்பவளாகவும், தூண்டுபவளாகவும் இருப்பதால், அவள் வேதமாதா என்றும் அழைக்கப்படுகிறாள்.
சரஸ்வதி தேவியை முறையாக வழிபட்டால் இவை அனைத்துயும் நீங்கள் உங்கள் வாழ்நாளில் பெற்றுக்கொள்ள முடியும். அந்தவகையில் சரஸ்வதி தேவியை எந்த நாளில் வழிப்படலாம் என விரிவாக தெரிந்துக்கொள்வோம்.
எந்த நாளில் வழிபட்டால் நல்லது?
வியாழக்கிழமை விஷ்ணுவின் நாளாகக் கருதப்படுகிறது, ஆனால் இந்த நாள் அன்னை சரஸ்வதிக்கும் உகந்த நாளாக கூறப்படுகிறது.
இந்த நாளில் அன்னை சரஸ்வதியை வழிபடுவதன் மூலம், அவளுடைய ஆசிகள் பக்தர்களுக்கு கிடைக்கும். எனவே வியாழக்கிழமை அன்னை சரஸ்வதியை வழிபடுங்கள்.
எந்த முறையில் வழிபட வேண்டும்?
முதலில் பிரம்ம முஹூர்த்தத்தில் எழுந்து குளித்து தியானம் செய்யுங்கள்.
வழிபாட்டு தலத்தை சுத்தம் செய்து சரஸ்வதி சிலை சுத்தம் செய்யவும்.
சரஸ்வதி தேவியை தியானித்து வழிபட வேண்டும்.
அன்னை சரஸ்வதிக்கு பூக்கள், பழங்கள், இனிப்புகளை தினமும் படைக்கவும்.
இவ்வாறு செய்வதன் மூலம் அன்னை சரஸ்வதியின் ஆசிகள் அந்த நபருக்கு நிலைத்திருக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |