இந்த ராசியில் பிறந்த ஆண்கள் அம்மா பிள்ளையாகவே இருப்பார்களாம்.. யார் தெரியுமா?

By Sakthi Raj Mar 22, 2026 08:58 AM GMT
Report

நாம் ஒரு சில வீடுகளில் பார்த்திருப்போம். அந்த குடும்பத்தில் இருக்கக்கூடிய ஆண் குழந்தை திருமணமானாலும் திருமணத்திற்கு பிறகும் எப்பொழுதும் அம்மா பேச்சையே கேட்டுக் கொண்டிருப்பார்கள். அம்மாவுக்கு பிறகு தான் மனைவியின் பேச்சைக் கேட்பார்கள்.

அதாவது இவர்கள் எப்பொழுதும் அம்மா வின் செல்ல குழந்தைகளாகவே இருப்பார்கள். அம்மா பேச்சை மீறி இவர்கள் எதையும் செய்ய மாட்டார்கள். அப்படியாக எந்த ராசியில் பிறந்த ஆண்கள் அம்மா பிள்ளையாகவே இருப்பார்கள் என்று பார்ப்போம்.

இந்த ராசியில் பிறந்த ஆண்கள் அம்மா பிள்ளையாகவே இருப்பார்களாம்.. யார் தெரியுமா? | Zodiac From This Boy Loves Mom Unconditionally

2026-ல் அடுத்த முதல்வர் யார்? ஜோதிடக் கணிப்பு என்ன சொல்கிறது?

2026-ல் அடுத்த முதல்வர் யார்? ஜோதிடக் கணிப்பு என்ன சொல்கிறது?

மேஷம்:

மேஷ ராசியினர் தாயின் மீது அதிக அன்பு கொண்டிருப்பார்கள். இவர்கள் தாய்க்காக எதையும் செய்யக் கூடியவர்கள். என்னதான் இவர்கள் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் தாயின் சொல் மீறியவர்கள் எந்த ஒரு காரியத்தையும் செய்ய மாட்டார்கள்.

ரிஷபம்:

ரிஷப ராசியினருக்கு இந்த உலகத்தில் அம்மாவை தவிர வேறு யாரையும் பிடிக்காது. இவர்கள் அம்மா பிள்ளை என்பதை தாண்டி நண்பர்கள் போல் பழகக் கூடியவர்கள். தங்கள் வாழ்க்கையில் என்ன நடக்கிறதோ அதை அப்படியே அம்மாவிடம் பகிர்ந்து கொள்ள கூடியவர்கள். அம்மாவிற்கு அதிக மதிப்பு கொடுப்பார்கள். அம்மாவை பிரிந்து இவர்களால் இருக்க முடியாது.

வாஸ்து: வடக்கு திசையில் என்ன பொருட்கள் வைக்கலாம்? வைக்கக்கூடாது?

வாஸ்து: வடக்கு திசையில் என்ன பொருட்கள் வைக்கலாம்? வைக்கக்கூடாது?

கடகம்:

கடக ராசியினர் பொருத்தவரை இவர்கள் மிகவும் உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள். அதேபோல் மிகவும் அன்பானவர்கள். இவர்கள் அம்மாவை பிரிந்து வெளியூருக்கு ஒரு வேலை பார்க்க செல்ல வேண்டும் என்று நினைத்தால் அந்த வேலையை வேண்டாம் என்று அம்மாவுடன் இருக்கக்கூடியவர்கள். அம்மாவுடன் எப்பொழுதும் அன்பான மற்றும் அக்கறையான உறவுகளைக் கொண்டு வாழக்கூடியவர்கள்.

துலாம்:

துலாம் ராசியினர் எப்பொழுதும் தங்களுடைய மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைக்கக் கூடியவர்கள். அம்மாவின் உணர்வுகளுக்கு எப்பொழுதும் மரியாதை கொடுப்பார்கள். தன்னுடைய தாய் ஒரு விஷயத்தை கேட்கும் முன்னே இவர்கள் அந்த விஷயத்தை செய்து முடிக்க கூடியவர்கள். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US