நண்பர்களிடம் பொறாமை குணத்துடன் பழகும் 4 ராசிகள் யார் தெரியுமா?
இந்த உலகம் ஒரு விசித்திரமானது. யார் எப்படிப்பட்டவர்கள் என்று நம்மால் அவ்வளவு எளிதில் புரிந்துக்கொள்ள முடியாது. நண்பர்கள் போல் பழகுவார்கள். ஆனால், நண்பர்களை தன்னுடைய முதல் போட்டியாளர்களாக மனதிற்குள் நினைத்துக் கொண்டு இருப்பார்கள்.
அப்படியாக, ஜோதிடத்தில் ஒரு சில ராசியினர் இயல்பாகவே எவ்வளவு நெருக்கமாக தங்கள் நண்பர்களுடன் பழகினாலும் அவர்களை தங்கள் போட்டியாளராக நினைக்கும் மனநிலை வைத்திருப்பார்கள். அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.
மேஷம்:
பொதுவாக மேஷ ராசியினருக்கு போட்டி என்றால் மிகவும் பிடித்தமானது. இவர்கள் யாரையும் தனக்கு நிகராக வைத்து பார்க்க விரும்பமாட்டார்கள். ஆதலால் எவ்வளவு நெருக்கமான நண்பர்களை இவர்கள் உடன் வைத்திருந்தாலும் மனதிற்குள் சிறு போட்டி மனப்பான்மையுடன் தான் பழகுவார்கள். சமயங்களில் அதை அவர்களை அறியாமல் வெளிக்காட்டி கொள்வதும் உண்டு.
சிம்மம்:
சிம்ம ராசியினர் எல்லோரிடமும் நன்றாக சிரித்து பழகக்கூடிய மனநிலை கொண்டவராக இருந்தாலும், இவர்கள் சுற்று சூழலில் முதன்மையான இடத்தில் இவர்கள் எப்பொழுதும் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். இவர்கள் என்னதான் உடன் இருப்பவர்களுக்கு உறுதுணையாக இருந்து செயல்படுவதாக தோன்றினாலும் மனதில் ஒரு போதும் பிறரின் வளர்ச்சியை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாது.
கன்னி:
கன்னி ராசியினர் படிப்பிற்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதே போல் இவர்கள் நட்புக்கும் முக்கியத்துவம் கொடுப்பது போல் இருந்தாலும், இவர்கள் மனதில் அந்த நட்பை விட நாம் எப்பொழுதும் முன்னிலையில் இருக்க வேண்டும் என்ற எண்ணம் ஓடிக்கொண்டே இருக்கும். இவர்கள் மனதில் ரகசியமாக பலரையும் போட்டியாளராக நினைத்துக்கொண்டு இருப்பார்கள்.
மகரம்:
மகர ராசியினர் மிகவும் மென்மையான மனிதராக இருந்தாலும், இவர்கள் எப்பொழுதும் எதையும் சாதிக்கவேண்டும் என்ற எண்ணம் மனதில் வைத்திருப்பார்கள். நட்பு வட்டாரத்தில் மிகவும் அன்பாக பழகும் இவர்கள் மனதில் நட்பை நட்பாக ஏற்கும் மனப்பான்மை சற்று குறைவாகவே இருக்கும். இவர்கள் நட்புடன் அவர்கள் வாழ்க்கையை எப்பொழுதும் ஒப்பிட்டு வாழ்ந்துக் கொண்டு இருப்பார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |