தேன் போல் பேசியே காரியத்தை சாதிக்க கூடிய ராசிகள் யார் தெரியுமா ?
நாம் ஒரு சிலரை பார்த்திருப்போம். அவர்கள் பேச்சில் அவ்வளவு இனிமை இருக்கும். ஆனால், இன்னொரு முகமாக அவர்கள் மிகவும் கோபப்படக் கூடியவர்களாக இருப்பார்கள். இருப்பினும் அதை நெருங்கியவர்களிடமே காட்டுவார்கள். மற்றவர்களிடம் காண்பிக்க மாட்டார்கள்.
அவர்களுடைய இனிமையான பேச்சால் எல்லோரையும் கவர்ந்து விடுவது உண்டு. அதுமட்டுமல்லாமல் பேசியே காரியத்தை சாதித்து விடுவார்கள். அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

மிதுனம்:
புதன் பகவானின் ஆதிக்கத்தை கொண்ட இவர்கள் பேசுவதில் மிகவும் திறமைசாலியாக இருக்கிறார்கள்.
பேச்சால் எதையும் சாதிக்க கூடிய வல்லமை பெற்றவர்கள். அதுமட்டுமல்லாமல் இவர்கள் ஒரு இடத்தில் நின்று பேசும் பொழுது அதை எல்லோரும் கவனிக்கும் அளவிற்கு தனித்துவமாக பேசுவார்கள்.
துலாம்:
துலாம் ராசியை பொறுத்தவரை யாரிடமும் வம்பு வழக்கு வைத்துக் கொள்ள விரும்ப மாட்டார்கள். அதுமட்டுமல்லாமல் உள்ளுக்குள் ஒருவரை வெறுத்தாலும் அவர்கள் வெளியே இனிமையாக பேசுவார்கள்.
கோபத்தை கூட காட்டிக் கொள்ளாமல் அந்த நபரை பார்த்தால் இனிமையாக பேசி பேசுவதுண்டு. இவர்கள் எவ்வளவு பெரிய பகை என்றாலும் அதை பேசியே தீர்க்கக்கூடியவர்கள்.
கும்பம்:
கும்ப ராசியை பொறுத்த வரை இவர்கள் பொறுமையாக செல்ல வேண்டும் என்று நினைப்பதுண்டு. ஆதலால் இவர்கள் பல நேரங்களில் ஒருவரை பிடிக்கவில்லை அவர்களிடத்தில் அதனை வெளிப்படுத்தாமல் இனிமையாக பேசுவார்கள்.
இவர்களுடைய இனிமையான பேச்சால் துரோகிகளும் எதிரிகளும் கூட இவர்களுக்கு மயங்குவது உண்டு. அதனால் பேசியே சாதிக்கும் வல்லமை பெற்றிருக்கிறார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |