ஒருவரை பேசியே மயக்குவதில் இந்த ராசிக்காரர்கள் திறமைசாலிகளாம்
மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் இருக்கிறது. அவை பெரும்பாலும் அவர்களுடைய ராசி, நட்சத்திரம் மற்றும் ஜாதக அமைப்பின் அடிப்படையில் அமைவதை நாம் பார்க்க முடிகிறது. அப்படியாக ஒருவர் பேச்சுத் திறனில் மிகவும் கட்டிக்காரராக இருப்பார்.
அவர் பேசினால் கட்டாயம் அவருடைய பேச்சுக்கு நாம் கட்டுப்பட்டு நடப்பது போல் அவருடைய பேச்சு திறமை அமைந்திருக்கும். இன்னும் சொல்லப் போனால் பேசி ஒருவரை மயக்குவதில் இவர்கள் திறமைசாலியாக இருப்பார்கள். அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.
மிதுனம்:
மிதுன ராசியின் அதிபதி புதன் பகவான் ஆவார். புதன் பகவான் தான் ஒருவடைய எழுத்து பேச்சு ஆகியவற்றிற்கு காரணமாக இருக்கிறார். மேலும், மிதுன ராசியினர் இயல்பாகவே மிகப்பெரிய அளவில் பேச்சாற்றலை பெற்றிருப்பார்கள்.
இவர்கள் பேசினால் அந்த இடத்திலிருந்து நாம் நகர முடியாத அளவிற்கு அவர்களுடைய பேச்சாளர் நம்மை கட்டிப்போட்டு வைத்திருக்கும். மேலும் ஒரு பிரச்சனை இருக்கிறது என்றால் மிதுன ராசிக்காரர்கள் அந்த இடத்தில் வந்து பேச அந்த பிரச்சனை ஒன்றும் இல்லாமல் ஆகிவிடும்.
துலாம்:
துலாம் ராசியினர் இவர்கள் வசீகரமான பேச்சைப் பெற்றிருப்பார்கள். மேலும் இவர்களுடைய பேச்சில் பக்குவமும் ஒரு கலை ரசனையும் நிறைந்திருக்கும். ஆதலால் இவர்களுடைய பேச்சை சுற்றி இருப்பவர்கள் மிகவும் ரசித்து கேட்கக்கூடிய அமைப்பை கொண்டிருப்பார்கள்.
இவர்கள்ஒரு இடத்தில் பேசும் பொழுது மற்றொருவரை சிந்திக்கத் தூண்டக்கூடிய நிலையில் அவர்களுடைய பேச்சு அமைந்திருக்கும். மேலும், இவர்களுடைய பேச்சுதிறனால் பலரும் இவர்களிடம் ஆலோசனை கேட்க கூடிய அளவிற்கு புகழ் பெற்றிருப்பார்கள்.
மீனம்:
மீன ராசியின் அதிபதி குரு பகவான் ஆவார். மேலும் மீன ராசியினர் ஒரு ஞானியை போல் பேசக்கூடிய தன்மையை பெற்றிருப்பார்கள். அதேபோல் ஒருவர் பொய் பேசுகிறார் என்றாலும் மீன ராசியினர் மிகத் தெளிவாக கண்டுபிடித்து விடுவார்கள்.
மீன ராசியினர் உடைய பேச்சு நம்மை எது நியாயம் என்று சிந்திக்கத் துண்டு வகையில் அமைந்திருக்கும். மேலும் மீன ராசியில் பிறந்தவர்கள் எழுத்து துறையில் மிகச் சிறப்பாக விளங்க கூடியவர்கள். இவர்கள் பேசினால் மறுபேச்சு பேச முடியாத அளவிற்கு இவர்களுடைய பேச்சு திறன் இருக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |