சஷ்டி விரதம் இருப்பவர்கள் சொல்ல வேண்டிய சக்தி வாய்ந்த 10 முருகர் மந்திரங்கள்
முருக பெருமானுக்கு உரிய மிகவும் முக்கியமான விரதங்களில் கந்த சஷ்டி விரதமும் ஒன்று. சஷ்டி விரதம் இருந்து வழிபாடு செய்பவர்களுக்கு முருகன் அருளால் கேட்ட வரம் கிடைக்கும் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கையாக இருக்கிறது. குழந்தை பாக்கியம் பெற முடியாது என்று நினைத்தவர்களும் சஷ்டி விரதம் இருந்து முருகப்பெருமானின் அருளால் குழந்தை பாக்கியம் பெற்றவர்கள் ஏராளம்.
அப்படியாக சஷ்டி விரதம் இருப்பவர்கள் அதிகாலையில் எழுந்து குளித்து முருகப்பெருமானின் படத்திற்கு பூமாலை அணிவித்து அலங்கரித்து விளக்கேற்றி மனதார பெருமானை வழிபாடு செய்து விரதத்தை தொடங்குவார்கள். ஒரு சிலர் அன்றைய நாள் முழுவதும் உணவுகளை எடுத்துக் கொள்ளாமல் விரதத்தை கடைபிடிப்பார்கள்.
முடியாதவர்கள் ஒருவேளை மட்டும் உணவை எடுத்துக்கொண்டு அல்லது பால் பழம் சாப்பிட்டு விரதம் இருப்பார்கள். அன்றைய தினத்தில் முருகப்பெருமானை மனதில் நிறுத்தி வழிபாடு செய்ய வேண்டும்.
அதோடு கந்த சஷ்டி கவசம், திருப்புகழ், மந்திரங்கள் சொல்லி வழிபாடு செய்வது நமக்கு பல்வேறு நன்மைகளை பெற்றுக் கொடுக்கும். அப்படியாக சஷ்டி விரதம் இருப்பவர்கள் கட்டாயம் சொல்ல வேண்டிய சக்தி வாய்ந்த பத்து மந்திரங்கள் பற்றி பார்ப்போம்.
சஷ்டி அன்று சொல்ல வேண்டிய மந்திரங்கள் :
1. ஓம் சரவண பவ
2. ஓம் ஷண்முகாய நமஹ
3. ஓம் முருகனே நமஹ
4. வேலவா வேலவா
5. ஓம் குமாராய நமஹ
6. ஓம் கந்தாய நமஹ
7. ஓம் சுப்ரமண்யாய நமஹ
8. ஓம் வேலாயுதாய நமஹ
9. ஓம் சுவாமிநாதாய நமஹ
10. ஓம் சரவணபவ ஸ்ரீ முருகனே நமஹ
இந்த மந்திரங்களை சஷ்டி விரதம் இருப்பவர்கள் தினமும் 108 முறை அல்லது 21 முறை என்ற எண்ணிக்கையில் பூஜை இடத்தில் வழிபாடு செய்யும் பொழுது பாராயணம் செய்யலாம் அல்லது முடிந்தவர்கள் இந்த மந்திரங்களை எழுதியும் வழிபாடு செய்யலாம்.
இந்த மந்திரங்களை எல்லாம் நம்பிக்கையோடு சஷ்டி விரதம் இருப்பவர்கள் பாராயணம் செய்தால் அவர்கள் வேண்டும் வரம் அனைத்தும் முருகப்பெருமானின் அருளால் கிடைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







