இன்றைய ராசி பலன்(08.11.2024)
மேஷம்
வியாபாரம் செய்யும் இடத்தில் சில பிரச்சனைகள் உருவாகலாம்.உங்கள் செல்வாக்கு உயரும்.வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். செயலில் வெற்றி காண்பீர்.
ரிஷபம்
பெரிய மனிதர்களின் உதவி கிடைக்கும்.வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சிலர் வழிபாட்டில் பங்கேற்பீர். இழுபறியாக இருந்த வேலை நடந்தேறும்.
மிதுனம்
வாகனப் பயணத்தில் கவனமாக இருப்பது நல்லது.செயல்களில் நிதானம் அவசியம். தேவையற்ற பிரச்னைகள் தேடி வரும். நீங்கள் நினைத்ததற்கு மாறாக உங்களுடன் இருப்பவர்களின் செயல் இருக்கும்.
கடகம்
வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். வருமானம் திருப்தி தரும்.நீண்டநாள் விருப்பம் நிறைவேறும். பணத்திற்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.
சிம்மம்
துணிச்சலாக செயல்பட்டு நினைத்ததை அடைவீர்.பகைவரால் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வழக்கு விவகாரம் சாதகமாகும். மனதில் தைரியம் கூடும்.
கன்னி
குழப்பம் தவிர்த்து செயல்படுவது நன்மையாகும். பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவது நல்லது. சூழ்நிலை அறிந்து செயல்படுவதால் உங்கள் வேலைகள் ஆதாயமாகும்.
துலாம்
பிறரின் பலம் பலவீனம் அறிந்து செயல்படுவீர்கள். சிலருக்கு வெளியூர் பயணம் உண்டாகும்.உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும் செயலில் லாபத்தை அடைவீர். தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.
விருச்சிகம்
சகோதரர்கள் ஒத்துழைப்பால் உங்கள் செல்வாக்கு உயரும்.வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். லாபம் அதிகரிக்கும். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.
தனுசு
உங்கள் செயலில் சாதகமான நிலை ஏற்படும். பொருளாதார நிலை உயரும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். புதிய பொருட்கள் வாங்குவீர். குடும்பத்தினர் தேவையைப் பூர்த்தி செய்வீர்.
மகரம்
பிறரால் சங்கடத்தை சந்திக்க வேண்டிவரும். உங்கள் வேலைகளை நீங்களே செய்வது நன்மையாகும்.நீண்டநாள் முயற்சி இன்று ஆதாயம் தரும். வாகனப் பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.
கும்பம்
பணத்தைக் கையாளும்போது கவனம் அவசியம்.நீண்ட நாள் கைக்கு வராத பணம் வரும்.கேட்ட இடத்தில் இருந்து உதவி கிடைக்கும்.மாலை நேரத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
மீனம்
பழைய பிரச்னைகள் முடிவிற்கு வரும். அலுவலகத்தில் உண்டான நெருக்கடிகள் விலகும்.பணப்புழக்கம் அதிகரிக்கும்.மனதில் மகிழ்ச்சி உருவாகும்.குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |