நாளைய ராசி பலன்(21-12-2025)
மேஷம்:
வெளியூர் செல்லும் பொழுது கவனம் தேவை. அலுவலகத்தில் தேவை இல்லாத விஷயங்களை நீங்கள் பகிர்ந்து கொள்ளாதீர்கள். அத்தை வழி உறவால் உங்களுக்கு ஆதாயம் உண்டாகும்.
ரிஷபம்:
குடும்பத்தில் வீண் சண்டை உண்டாகும். வாழ்க்கை துணையிடம் அனுசரித்து செல்லுங்கள். வழக்கு விஷயங்களில் இருந்த சிக்கல் விலகி நன்மை உண்டாகும் நாள். மதியம் மேல் நற்செய்தி கிடைக்கும்.
மிதுனம்:
உடல் நிலையில் இருந்த சங்கடம் விலகும். தந்தை உங்களுக்கு முழு ஆதரவு கொடுப்பார். விட்டு விலகி சென்ற சொந்தங்கள் மீண்டும் உங்களிடம் வந்து பேசுவார்கள். எதிரிகள் விலகி செல்வர்.
கடகம்:
வியாபாரத்தில் நல்ல லாபம் சந்திக்கும் நாள். கணவன் வழி சொந்தங்களால் இருந்த கவலைகள் விலகும். உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியான சுழல் உண்டாகும். நன்மையான நாள்.
சிம்மம்:
இன்று மறைமுக எதிரிகளால் சில பாதிப்புகள் வரலாம். தேவை இல்லாமல் வீண் வார்த்தைகள் விடாதீர்கள். உடன் பிறந்தவர்களால் சந்தித்த கஷ்டங்கள் விலகும் நன்மை உண்டாகும் நாள்.
கன்னி:
வேலை தொடர்பாக வெளியூர் பயணம் செல்ல நேரலாம். உங்கள் சேமிப்புகளில் கவனம் செலுத்த வேண்டிய நாள். குழந்தைகள் ஆரோக்கியத்தில் முழு அக்கறை செலுத்த வேண்டும்.
துலாம்:
அலுவலகத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிர்பாராத நபரின் நட்பால் உங்களுக்கு ஆதாயம் உண்டாகும் நாள்.
விருச்சிகம்:
வீண் பிடிவாதம் காட்டாதீர்கள். வங்கி தொடர்பான விஷயங்களில் சந்தித்த கவனம் தேவை. உடன் பிறந்தவர்களிடம் வீண் வாக்கு வாதம் செய்யவேண்டாம். உங்கள் பொருட்களில் கவனம் தேவை.
தனுசு:
உடல் சோர்வு உண்டாகும். உங்களை சிலர் புரிந்து கொள்ளாமல் நடந்து கொள்ளலாம். தாய் வழி சொந்தங்கள் உங்களுக்கு துணையாக இருப்பார்கள். வேலை அக்கறை செலுத்துவீர்கள்.
மகரம்:
மனதில் வீண் யோசனையும் குழப்பமும் உண்டாகும். திருமண விஷயங்களில் இருந்த கருத்து வேறுபாடுகள் விலகும். வெளிநாடு செல்லும் உண்டாகும். அக்கம் பக்கத்தில் கவனம் வேண்டும்.
கும்பம்:
முகம் தெரியாத நபர்களிடம் தேவை இல்லாத விஷயங்களை பகிர்ந்து கொள்ளாதீர்கள். மருத்துவ ரீதியாக சில செலவுகள் வரலாம். தாய் மாமன் வழி உதவி கிடைக்கும் நாள்.
மீனம்:
உங்களை சுற்றி உள்ளவர்களை பற்றி புரிந்து கொள்வீர்கள். சிலருக்கு நண்பர்கள் வட்டம் விரிவடையும். தொழில் ரீதியாக சந்தித்த சிக்கல் விலகும் நாள். சமுதாய பணிகளில் ஈடுபடுவீர்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |