வாழ்க்கையில் உள்ள கவலைகள் விலக இந்த 16 விஷயங்களை தெரிந்து கொள்வோம்
வாழ்க்கையில் நமக்கு பல்வேறு கஷ்டங்கள் வருவது இயல்பு என்றாலும், அதைக்கடந்து செல்ல மனிதனுக்கு போதுமான தைரியமும் மன நிலையும் வருவது இல்லை. அப்படியாக, நாம் வாழ்க்கையில் கட்டாயம் தெரிந்து கொள்ளவேண்டிய முக்கியமான வாக்கியங்கள் பற்றி பார்ப்போம். அதை படித்தால் நல்ல மாற்றத்தை நாம் காணலாம்.
1. நமக்கு ஆறுதலே சொல்லமுடியாத துன்பத்திற்கு நிச்சயமாக அழுகை சிறந்த மருந்தாகும்.
2. நாளை என்பது உறுதியில்லை, ஆனால் அவை நம் மனது ஏற்பது இல்லை.
3. குழந்தையாக பிறந்து இரண்டு வயதில் நாம் பேசக்கற்றுக்கொள்கின்றமே தவிர, நாம் ஒருபொழுதும் எவ்வாறு பேச வேண்டும் என்று கற்றுக்கொள்வது இல்லை.
4. நாம் வாழ்க்கையில் சந்திக்கும் எல்லா மனிதர்களும் எதோ ஒரு போராட்டத்தை சந்தித்து கொண்டு இருக்கிறார்கள்.
5. சமயங்களில் நரகம் கூட இந்த வாழ்க்கையை விட அவ்வளவு வலி தந்து விட போவது இல்லை என்றே தோன்றுகிறது.
6. மனிதனின் தேவைகள் வாழ்நாள் முழுவதும் தீர்ந்து போவது இல்லை. ஆதலால் மன அமைதியும் மகிழ்ச்சியும் தேடுவதே சிறந்தது.
7. நம்மில் பலரும் அன்பை வெளிப்படுத்த தயங்குகின்றமே தவிர ஒரு பொழுதும் கோபத்தை வெளிப்படுத்த தயங்குவதில்லை.
8. பெரும்பாலான பிள்ளைகளுக்கு தன் தகப்பனின் வருமானத்தில் தான் 25 ஆண்டுகள் வாழ்ந்தோம் என்று மறந்து விடுகிறார்கள்.
9. கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது
10. வேலை இல்லாதவருக்கு பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை.
11. எவன் ஒருவன் மன காயத்திற்கு மருந்து கண்டுபிடிக்கின்றானோ அவனே உலகின் முதல் பணக்காரன்.
12. வாழ்க்கையில் ஒரு சில நினைவுகளுக்கு எத்தனை வருடம் கடந்தாலும், அவற்றிக்கு நரை விழுவதே இல்லை.
13. நம் வாழ்க்கையில் இழப்பிற்கு மட்டுமே அழ வேண்டும் என்றால் இந்த வாழ்நாள் முழுவதும் போதாது. இந்த வாழ்க்கையில் இழப்புகள் தான் ஏராளம்
14. பூனையை விட சிங்கம் வலிமையானது என்று எலிகள் ஒரு போதும் ஒத்துக் கொள்ளாது
15. உனக்காக தன் மீதான நியாயமான வாதத்தைக் கூட நிறுத்திக் கொள்ளும் பெண் கிடைத்தால் ஒருபோதும் இழந்து விடாதே.
16. நூறு பேரின் வாயை மூட முயற்சிப்பதை விட நம் காதுகளை மூடிக்கொள்வது மிகச் சிறந்தது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |