மகாலட்சுமி ராஜ யோகத்தால் நினைத்ததை சாதிக்க போகும் 3 ராசிகள்- யார் தெரியுமா?
மனிதர்களுக்கு சமயங்களில் இன்பம் துன்பம் என்பது ஜோதிடத்தில் கிரகங்களில் மாற்றங்களால் நிகழக்கூடியதாக இருக்கிறது. அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு நவம்பர் 20ஆம் தேதி முதல் செவ்வாய் மற்றும் சந்திர பகவான் உடைய இணைவால் மகாலட்சுமி ராஜயோகம் என்ற அரிய யோகம் உருவாகிறது.
இந்த யோகமானது 12 ராசிகளுக்கும் நன்மையை செய்தாலும் குறிப்பிட்ட மூன்று ராசிகளுக்கு மிகப்பெரிய அளவில் ராஜயோகத்தை வழங்க இருப்பதாக சொல்கிறார்கள். அவர்கள் எந்த ராசிகள் என்று பார்ப்போம்.

மேஷம்:
மேஷ ராசியினருக்கு சந்திரன் மட்டும் செவ்வாய் இணைவு இவர்கள் தொழில் வாழ்க்கையில் ஒரு முக்கியமான முடிவை எடுக்கக்கூடிய ஒரு காலகட்டத்தை இவர்களுக்கு கொடுக்கப் போகிறது. இவர்கள் தொழிலில் மிகப்பெரிய அளவில் முன்னேற்றமும் லாபமும் பெறப்போகிறார்கள். எதிர்பாராத திடீர் வரவுகள் இவர்கள் பெறப் போகிறார்கள். தொழில் ரீதியாக இவர்கள் கேட்ட இடத்தில் இவர்களுக்கு நினைத்தபடி உதவிகள் கிடைக்கப் போகிறது.
கடகம்:
கடக ராசியினருக்கு சந்திரன் மற்றும் செவ்வாயின் இணைவு எதையும் தெளிவாக யோசித்து முடிவு எடுக்கக்கூடிய ஒரு தன்மையை கொடுக்கப் போகிறது. இவர்கள் மனதில் உள்ள பயம் விலகி எதையும் சமாளித்துக் கொள்ளலாம் என்ற ஒரு அற்புதமான ஆற்றல் பிறக்கக்கூடிய ஒரு காலமாகும்.குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் பெறப்போகிறார்கள். ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழும் யோகம் உண்டாகும்.
மகரம்:
மகர ராசிக்கு சந்திரன் மட்டும் செவ்வாயின் இணைவு என்பது இவர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த விஷயத்தை நிறைவேற்றி கொடுக்கப் போகிறது. சிலருக்கு வேலை மாற்றம் செய்ய வேண்டும் என்ற யோசனை இருந்தால் கட்டாயமாக இவர்களுக்கு நினைத்த இடத்தில் வேலை கிடைக்கும். வெளிநாடு சென்று வேலை பார்க்க வேண்டும் என்று முயற்சி செய்பவர்களுக்கு கட்டாயமாக அவர்கள் நினைத்த நாட்டிற்கு சென்று வேலை பார்க்கக் கூடிய அமைப்பு உருவாகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |