கார்த்திகை மாதம் முருகப் பெருமான் அருள் பெற இந்த 5 நாட்களை தவறவிடாதீர்கள்
இறை வழிபாடு செய்வதற்கு எல்லா நாட்களும் உகந்த நாட்கள் என்றாலும் குறிப்பிட்ட தெய்வங்களுக்கு அவர்களுக்கு உரிய நாட்களில் வழிபாடு செய்யும் பொழுது நம் வழிபாடு இன்றும் சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. அப்படியாக கார்த்திகை மாதம் என்பது அனைத்து தெய்வங்களையும் வழிபாடு செய்வதற்கு மிக உகந்த மாதமாகும்.
அதிலும் குறிப்பாக இந்த மாதத்தில் வரக்கூடிய கிருத்திகை, சஷ்டி ஆகிய நாட்களில் விரதம் இருப்பது மிக மிக சிறந்த பலன்களை நமக்கு கொடுப்பதாக சொல்கிறார்கள். மேலும் வருடத்தில் இவ்வாறு குறிப்பிட்ட சில நாட்கள் மட்டுமே மிகவும் சக்தி வாய்ந்ததாகவும் வழிபாட்டுக்குரிய ஒரு மிகச்சிறந்த நாளாகவும் இருக்கிறது.
இந்த நாட்களில் நாம் மறக்காமல் விரதம் இருந்து இறைவனை வழிபாடு செய்யும் பொழுது நம் வாழ்க்கையில் சந்திக்கக்கூடிய தடைகள் எல்லாம் விலகும். அந்த வகையில் முருகப்பெருமானை வழிபாடு செய்வதற்கு 2025 ஆம் ஆண்டு நவம்பர் 22 ஆம் தேதி முதல் நவம்பர் 26 வரையிலான ஐந்து நாட்கள் மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது.

அதாவது கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை சஷ்டி மற்றும் அதற்கு முந்தைய நான்கு நாட்களும் மிகவும் அற்புதமான நாளாகவும் வழிபாடு செய்வதற்கு உரிய உகந்த நாளாகவும் பார்க்கப்படுகிறது. இந்த ஐந்து நாட்களும் முருகப்பெருமானிடம் நாம் என்ன வரம் கேட்டு வேண்டினாலும் அவை நிச்சயம் நடக்கும் என்பது ஐதீகம்.
ஆதலால் இந்த ஐந்து நாட்களும் முடிந்தவர்கள் காலை மாலை நேரங்களில் முருகப்பெருமானுடைய ஆலயங்களுக்கு சென்று அங்கு முருகப்பெருமானை வழிபாடு செய்து அபிஷேக பூஜைகளில் கலந்து கொள்வது அவர்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை பெற்றுக் கொடுக்கும்.
இந்த நாட்களில் நாம் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தாலும் சரி வீடுகளில் இருந்து வழிபாடு செய்தாலும் சரி முருகப்பெருமானுடைய திருப்புகழ் மற்றும் முருகப்பெருமானுடைய பாடல்களை மந்திரங்களை பாடி வழிபாடு செய்யும் பொழுது நம்முடைய பிரார்த்தனைக்கு இன்னும் கூடுதல் சக்தி கிடைக்கிறது.
அதாவது இவ்வாறான சக்தி வாய்ந்த நாட்கள் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே வருவது குறிப்பிடத்தக்கது. ஆக இந்த நாட்களை நாம் தவறவிடாமல் கட்டாயம் நம்முடைய வழிபாட்டிற்கு பயன்படுத்தி முருகப்பெருமாருடைய அருளை பெற்று ஆன்மிகத்திலும் வாழ்க்கையிலும் நல்ல வளர்ச்சி அடையலாம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |