புதன்- குருவின் வக்கிர பெயர்ச்சி- மிகப்பெரிய அளவில் மாற்றத்தை பெறப்போகும் 3 ராசிகள்
ஜோதிடத்தில் குரு பகவான் மற்றும் புதன் பகவான் இரண்டு கிரகங்களும் மிக முக்கியமான மற்றும் மிகவும் மங்களகரமான கிரகமாக இருக்கிறது. இந்த இரண்டு கிரகங்களும் ஒருவர் ஜாதகத்தில் நல்ல நிலையில் அமைந்துவிட்டால் அந்த ஜாதகர் படிப்பிலும் சமுதாயத்திலும் நற்பெயருடன் வாழக்கூடியவராக இருப்பார்கள்.
அப்படியாக வேத ஜோதிட சாஸ்திரத்தின் படி நவம்பர் 10 ஆம் தேதி அதிகாலை 12. 31 மணிக்கு புதன் பகவான் துலாம் ராசிக்கு பின்னோக்கி செல்கிறார். அதற்கு அடுத்த நாள் நவம்பர் 11ஆம் தேதி குரு பகவான் கடக ராசிக்கு பின் நோக்கி செல்கிறார். ஜோதிட சாஸ்திரத்தில் இந்த இரண்டு கிரகங்களும் ஒரே நேரத்தில் வக்கிர நிலையில் இருப்பது என்பது மிக சிறந்த பலன்களை ஒரு சில ராசிகளுக்கு உண்டாகிறது. அவை எந்த ராசிகள் என்று பார்க்கலாம்.

ரிஷபம்:
ரிஷப ராசியினருக்கு குரு மற்றும் புதன் பகவானின் வக்கிரப் பெயர்ச்சி ஆனது அவர்களுடைய தொழில் வாழ்கையில் ஒரு மிகச்சிறந்த மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் கொடுக்கபோகிறது. இவர்களுடைய வாழ்க்கை துணை இவர்களுக்கு மிகவும் உதவியாகவும் இவர்களை புரிந்து நடந்து கொள்ளும் நிலை உருவாகும். சமுதாயத்தில் இவர்களுக்கான மதிப்பும் பெயரும் உயரக்கூடிய அமைப்பு உண்டாகும்.
கன்னி:
கன்னி ராசியினருக்கு குரு மற்றும் புதன் பகவானின் வக்கிர பெயர்ச்சியானது அவர்களுடைய தொழில் வாழ்க்கையில் ஒரு நிலையான தன்மையை கொடுக்க போகிறது. கடந்த சில தினங்களாக தொழில் வாழ்க்கையில் சில குழப்பங்களை சந்தித்து வந்த கன்னி ராசியினருக்கு அந்த குழப்பங்கள் விலகி அவர்களுடைய தொழில் வாழ்க்கையில் நல்ல பெயரும் புகழும் கிடைக்கப் போகிறது. திருமண வாழ்க்கையில் சந்தித்து வந்த சிக்கல்கள் விலகும். காதல் வாழ்க்கையில் இனிமையான சூழல் உருவாகும்.
மீனம்:
மீன ராசியினருக்கு குரு மற்றும் புதன் பகவானின் வக்கிர பெயர்ச்சியானது அவர்களுடைய திட்டங்களை நினைத்தபடி நிறைவேற்றக்கூடிய அமைப்பை பெற்றுக் கொடுக்கப் போகிறது. திடீர் அதிர்ஷ்டம் மற்றும் திடீர் பொருளாதார முன்னேற்றம் இவர்கள் வாழ்க்கையை உயர்ந்த போகிறது. நீண்ட நாட்களாக நினைத்த விஷயங்கள் இவர்கள் கைகளுக்கு அருகில் வந்து இவர்களை மகிழ்ச்சி செய்யப்போகிறது. பிள்ளைகள் ரீதியாக இவர்கள் சந்தித்து வந்த மன வேதனைகள் விலகி மகிழ்ச்சி உண்டாகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |