ராகு திசை- குரு பார்வையால் சொத்துக்களை குவிக்க போகும் 3 ராசிகள்
ஜோதிடம் பொருத்தவரை குரு பகவான் ஒருவருக்கு நன்மையை அதிக அளவில் வழங்கக்கூடியவர். இவர் தான் ஒரு மனிதன் செல்வத்தோடும் குடும்ப சந்தோஷத்தோடும் இருப்பதற்கு காரணியாக இருக்கிறார். அதேபோல் கிரகங்களில் ராகு மற்றும் சனி பகவான் சில நேரங்களில் நமக்கு பல சோதனை கொடுபவர்களாக இருந்தாலும் அவர்களுக்குரிய திசை வரும் பொழுது நமக்கு நல்ல பலன்களை தருகிறார்கள்.
அப்படியாக குரு பகவானின் பார்வையும் ராகுவின் திசையும் இணையும் பொழுது சில ராசிகளுக்கு மிகப் பெரிய மாற்றம் நடக்கும். அப்பொழுது அந்த ராசியினர் சொத்து பணம் ஆடம்பர வாழ்க்கை என்று சந்தோசமாக வாழ்வார்கள். அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.
ரிஷபம்:
இவர்களுக்கு நீண்ட நாட்களாக மனதில் உள்ள பொருளாதாரக் குழப்பங்கள் விலகும். அதாவது பொருளாதாரத்தில் சில ஏற்ற இறக்கங்களை சந்தித்துக் கொண்டிருப்பதால் அவர்களுக்கு மனதளவில் சில சங்கடங்கள் உருவாகி இருக்கும். அந்த சங்கடங்கள் அனைத்தும் விலகி அவர்கள் நற்பலன்களை பெறப் போகிறார்கள். சிலருக்கு இடமாற்றம் வேலை மாற்றம் போன்ற விஷயங்கள் நடக்கும். திருமணம் யோகம் உருவாகும்.
சிம்மம்:
சிம்ம ராசியினருக்கு இந்த இணைவுகள் வாழ்க்கையில் ஒரு தெளிவை கொடுக்கப் போகிறது. இவர்கள் நீண்ட நாட்களாக வியாபாரத்தில் சில மாறுதல்களை செய்ய வேண்டும் என்று நினைத்து இருப்பார்கள், அந்த மாறுதல்களை செய்யக்கூடிய ஒரு அற்புதமான காலகட்டமாகும். இவர்கள் வண்டி வாகனம் மாற்றங்களை செய்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். தாய் வழி உறவுகளால் ஏற்பட்ட சிக்கல்கள் விலகும்.
மகரம்:
மகர ராசியினருக்கு இந்த காலகட்டத்தில் ஒரு விஷயத்தை தெளிவாக யோசித்து முடிவு எடுக்கும் திறன் பிறக்கும். உயர் கல்விக்காக காத்திருக்கும் மாணவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் உருவாகும். தொழில் ரீதியாக சந்தித்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் விலகப் போகிறது. ஒரு சிலருக்கு நினைத்த இடத்தில் இருந்து திருமண வரன் கிடைக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த பொருட்களை வாங்குவீர்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







