அடுத்து 3 மாதங்களில் குபேரன் யோகத்தை பெறப்போகும் 3 ராசிகள்
ஜோதிடத்தை பொருத்தவரை சனிபகவான் எதையும் தாமதமாகத்தான் நமக்கு அருள் புரிவார். அவர் ஒரு மனிதனை சோதனை செய்து அவருக்கு பொறுமையையும் நிலையான வெற்றியும் கொடுப்பவர். அதோடு ஒரு மனிதனுடைய ஆடம்பரம் கல்வி கலை மகிழ்ச்சி ஆகியவற்றிற்கு காரணமாக இருப்பவர் சுக்கிர பகவான்.
இவர் நல்ல விதமாக அமைந்துவிட்டால் அவர்கள் மிகப்பெரிய அளவில் வெற்றியை அடைகின்றார்கள். அந்த வகையில் அடுத்து மூன்று மாதங்களுக்கு சனியன் தடைகளை தவிர்த்து சுக்கிர பகவானின் அருளால் வாழ்க்கையில் செல்வ வளத்தை பெரும் ராசிகள் யார் என்று பார்ப்போம்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு அடுத்த மூன்று மாதம் அவர்கள் வியாபாரத்திலும் தொழிலிலும் மிகச் சிறந்து விளங்கப் போகிறார்கள். பண வசதி இவர்களுக்கு தாராளமாக அமையப் போகிறது. சனி பகவானின் சோதனை காலம் இவர்களுக்கு இருந்தாலும் அதனை தகர்த்து இவர்கள் சாதனையாக மாற்றி விடுவார்கள். சமுதாயத்தில் இவர்களுக்கான செல்வாக்கு உயரப்போகிறது. ஒரு சிலருக்கு நிலம் வீடு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு அடுத்த மூன்று மாத காலம் அவர்கள் வாழ்க்கையில் மிகப் பெரிய வளர்ச்சியை சந்திக்கப் போகிறார்கள். தொழில் வாழ்க்கையில் நல்ல திருப்பங்களும் வேலையில் சம்பள உயர்வு பதவி உயர்வு போன்ற நல்ல விஷயங்கள் நடக்க உள்ளது. அதோடு வெளிநாடு செல்ல வேண்டும் என்று ஆசைப்படுபவர்களுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்புகளும் கலைத்துறையில் உள்ளவர்களுக்கு மிகப்பெரிய அளவில் வெற்றியும் புகழையும் தேடிக் கொடுக்கப் போகிறது.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு அடுத்த மூன்று மாதம் நீண்ட நாட்களாக இருந்து வந்த மன உளைச்சல் குறைய போகிறது. எதிர்பாராத வெற்றியும் வியாபாரத்தில் நல்ல லாபமும் கிடைக்கப் போகிறது. நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வழியாக இவர்களுக்கு நல்ல ஆதாயம் உண்டாகும். சொத்து விவரங்கள் இவர்களுக்கு வெற்றியை கொடுக்கப் போகிறது. கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தால் அவை விலகி குடும்பத்துடன் மகிழ்ச்சி உண்டாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







