மிரள வைக்கும் 11 மாதம் திருப்பதி தேவஸ்தானம் வருவாய்- எவ்வளவு தெரியுமா?
உலக புகழ் பெற்ற மற்றும் உலகத்தின் மிகவும் பணக்கார கோயில்களில் திருப்பதி ஏழுமலையான் கோயிலும் ஒன்று. இங்கு ஒவ்வொரு நாளும் பக்தர்கள் பல்வேறு இடத்தில் இருந்தும் பல்வேறு நாடுகளில் இருந்தும் பகவானை தரிசிக்க வருகிறார்கள். மேலும் வருகை தரும் பக்தர்கள் தங்களின் வேண்டுதல் நிறைவேறிய பிறகு பெருமாளுக்கு அவர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதும் உண்டு.
மேலும் இங்கு கடந்த ஆண்டு நவம்பர் 11 ஆம் தேதி பிஆர் நாயுடு அறங்காவலர் குழு தலைவராக பொறுப்பேற்று கொண்டார். அப்படியாக, திருப்பதி தேவஸ்தானத்திற்கு கடந்த 11 மாதங்களில் மட்டும் அறக்கட்டளைகளுக்கு 918 கோடியே 6 லட்சம் ரூபாய் நன்கொடையாக கிடைத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் தேவஸ்தான அறக்கட்டளைக்கு 338 கோடியே 80 லட்சம் ரூபாயையும், ஸ்ரீவானி அறக்கட்டளைக்கு 252 கோடியே 83 லட்சம் ரூபாயையும், ஸ்ரீ பாலாஜி ஆரோக்கிய வரப்பிரசாதினி அறக்கட்டளைக்கு 97 கோடி 97 லட்சம் ரூபாயையும், ஸ்ரீ வெங்கடேஸ்வரா பிராணதான அறக்கட்டளைக்கு 66 கோடி 53 லட்ச ரூபாயையும், ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோ சம்ரக்க்ஷண அறக்கட்டளைக்கு 56 கோடியே 77 லட்ச ரூபாயையும், ஸ்ரீ வெங்கடேஸ்வரா வித்யாதான அறக்கட்டளைக்கு 33 கோடியே 47 லட்சம் ரூபாயையும், ஸ்ரீ பாலாஜி ரிசர்ச் அண்ட் ரீகாபிலிடேஷன் ஃபார் டிசேபில்ட் மருத்துவமனை அறக்கட்டளைக்கு 30 கோடியே 2 லட்சம் ரூபாயையும், ஸ்ரீ வெங்கடேஸ்வரா சர்வஸ்ரேயா அறக்கட்டளைக்கு 20 கோடியே 46 லட்சம் ரூபாயையும், ஸ்ரீ வேங்கடேஸ்வரா வேதபரிரட்சன அறக்கட்டளைக்கு 13 கோடியை 87 லட்ச ரூபாயையும், ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி சேனலுக்கு 6 கோடியே 29 லட்ச ரூபாயையும், ஸ்ரீ வெங்கடேஸ்வரா இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெடிக்கல் சைன்ஸ் மருத்துவமனைக்கு ஒரு கோடியே 52 லட்சம் ரூபாயையும் பக்தர்கள் நன்கொடையாக வழங்கியுள்ளனர் என்று தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி ஆர் நாயுடு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் கோயிலுக்கு நன்கொடையை வழங்கப்பட்டவையில் 579 கோடியே 38 லட்சம் ரூபாயை பக்தர்கள் ஆன்லைன் மூலமும் 339 கோடியே 20 லட்சம் ரூபாயை நேரிலும் கொடுத்திருக்கிறார்.
மேலும், நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு உரிய மரியாதையும், அவர்களுக்கான வசதிகளும் செய்து கொடுப்பதில் எந்த ஒரு குறைபாடும் ஏற்படாத வகையில் தேவஸ்தான நிர்வாகம் செயல்படுவதால் தான் இந்த அளவிற்கு நன்கொடைகள் வந்திருப்பதாக சொல்கிறார்கள்.
மேலும், பக்தர்களின் நன்கொடை வைத்து கோயில் திருப்பணிகள் செய்வது, கட்டிடங்கள் கட்டுவது, இயந்திரங்கள் வாங்குவது தொழில்நுட்ப வசதிகளை செய்வது போன்ற பணிகளை செய்வதாக சொல்கிறார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







