2026: ஜூலை 16 நடக்கும் சூரியன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகள் காவனமாக இருக்க வேண்டுமாம்
சூரிய பகவான் ஒவ்வொரு தமிழ் மாத தொடக்கத்தின் பொழுதும் அவருடைய வீட்டை மாற்றுகிறார். அப்படியாக, ஜூலை 16ஆம் தேதி சூரிய பகவான் மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு மாறுகிறார். இந்த சூரியன் பெயர்ச்சி 12 ராசிகளுக்கு மிகப்பெரிய அளவில் தாக்கத்தை கொடுக்கும்.
கடக ராசியில் ஏற்கனவே குரு பகவான் உச்சமாக இருக்கிறார். அதனோடு சேர்ந்து சூரிய பகவான் இணைகின்ற பொழுது ஒரு சக்தி வாய்ந்த மாற்றத்தை உருவாக்கும் என்று நம்பப்படுகிறது. இதனால் எந்த ராசிகள் சுப பலன்களை பெற போகிறார்கள் என்பதை பற்றி பார்ப்போம்.

மேஷம்:
இவர்களுக்கு இந்த காலகட்டம் ஒரு கலவையான பலனாக இருக்க போகிறது. உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டிய காலகட்டம் என்றாலும் வேலை பளு இவர்களுக்கு அதிகரிக்கப் போகிறது.
முதலீடுகளில் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தேவை இல்லாத நபர்களிடம் உங்களுடைய சொந்த விஷயங்களை பகிர்ந்து கொள்ளாதீர்கள்.
ரிஷபம்:
ரிஷப ராசியினருக்கு சூரியன் பெயர்ச்சி இவர்களுக்கு உழைப்பிற்கு ஏற்ற ஊதியத்தை கட்டாயம் பெற்றுக் கொடுக்கப் போகிறது.
திருமண வாழ்வில் இருந்து வந்த விரிசல் விலகி கணவன் மனைவி ஒற்றுமையாக வாழக்கூடிய யோகத்தை உருவாக்கும். ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். புதிய வாடிக்கையாளர் வருகையால் வியாபாரம் செழிப்பாக வளரும்.
துலாம்:
இவர்களுக்கு இந்த காலகட்டம் தொழில் ரீதியாக பெயரும் புகழும் கிடைத்தாலும் வருமானத்தில் சில சிக்கல்களை சந்திக்க நேரலாம்.
இருப்பினும் கைகளில் பணம் பற்றாக்குறை இல்லாமல் இவர்கள் சம்பாதிக்கக்கூடிய நிலை உருவாகும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உடைய முழு ஆதரவால் நீங்கள் தொழில் ரீதியாக நல்ல வளர்ச்சியை பெற போகிறீர்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |