2026: ஏப்ரல் மாதத்தில் உருவாகும் 5 ராஜ யோகங்கள்.. பண மழை யாருக்கு?

By Sakthi Raj Apr 02, 2026 08:30 AM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தில் இரண்டு கிரகங்கள் ஒன்றுக்கொன்று 2மற்றும் 12 வது வீடுகளில் இருக்கும் பொழுது மிகப்பெரிய ராஜயோகம் உருவாகிறது. அதாவது ஜோதிடத்தில் துவித்வாதச யோகம் மிகவும் முக்கியமான மற்றும் மங்களகரமான யோகமாக பார்க்கப்படுகிறது.

இந்த யோகமானது ஏப்ரல் 1, 4, 19, 23 மற்றும் 29-ல் உருவாக இருக்கிறது. இந்த யோகம்3 ராசிக்காரர்களுக்கும் மிகப்பெரிய அளவில் நல்ல மாற்றங்களை கொண்டு வந்து சேர்க்கப் போகிறது. இந்த யோகமானது திடீரென்று சில பண வரவுகளையும் சில முக்கிய வாய்ப்புகளை தேடி கொடுக்கும். அந்த வகையில் எந்த ராசியினர் இந்த யோகத்தால் மிகப்பெரிய நல்ல பலன்களை பெற போகிறார்கள் என்று பார்க்கலாம்.

2026: ஏப்ரல் மாதத்தில் உருவாகும் 5 ராஜ யோகங்கள்.. பண மழை யாருக்கு? | 2026 April 1 4 19 23 Dates Bring Luck For 3 Zodiac

முருகப்பெருமானுக்கு மிகவும் பிடித்த 3 ராசிகள் யார் தெரியுமா?

முருகப்பெருமானுக்கு மிகவும் பிடித்த 3 ராசிகள் யார் தெரியுமா?

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த ராஜயோகமானது இவர்களுக்கு பண பலத்தை கொடுக்கப்போகிறது. நீண்ட நாட்கள் முடிவிற்கு வராத விஷயங்கள் எதிர்பாராத நேரத்தில் நல்ல முடிவை பெறும். வேலையில் உங்களுடைய திறமை வெளிப்படும். மேலதிகாரிகளின் பாராட்டுகளை பெற்று முக்கிய பங்கை அலுவலகத்தில் பெறப்போகிறீர்கள். குடும்பத்தல் அமைதியான சூழ்நிலையும் வாழ்க்கை துணையுடன் பொழுதுபோக்கான விஷயங்களில் ஈடுபடுவீர்கள்.

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த ராஜயோகமானது இவர்களுக்கு லாபத்தையும் மனதளவில் ஒரு சமநிலையையும் கொண்டு வரப் போகிறது. பொருளாதாரத்தில் உயர்ந்த நிலைக்கு செல்ல போகிறார்கள். புதிய வருமானம் உருவாகும். வேலையில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். உறவுகளில் இனிமையான சூழ்நிலை உண்டாகும். தொழில் ரீதியாக கூட்டாளியுடன் நல்ல லாபத்தை பெறுவீர்கள். உங்களுடைய அறிவு கூர்மையால் சில முக்கியமான சவால்களை சமாளிப்பீர்கள்.

2026: அட்சய திருதியை எப்பொழுது? அன்றைய நாளில் நாம் என்ன செய்ய வேண்டும்?

2026: அட்சய திருதியை எப்பொழுது? அன்றைய நாளில் நாம் என்ன செய்ய வேண்டும்?

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு இந்த யோகமானது பணரீதியாகவும் மனரீதியாகவும் மிகப் பெரிய அளவில் நன்மையை செய்யப்போகிறது. நீண்ட நாட்களாக கைகளுக்கு வராமல் இருந்த பணம் வந்து சேரும். புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். ஆன்மீகத்தில் அதிக ஆர்வம் உண்டாகும். உங்களுடைய நீண்ட நாட்கள் கனவு நிறைவேறும். உங்களுடைய கற்பனை திறன் வெளிப்படும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.

  

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US