2026 ராகு கேது பெயர்ச்சி.. மேஷ ராசிக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட்..பதவி உயர்வு முதல் பணவரவு வரை

By Sakthi Raj Nov 13, 2026 09:13 AM GMT
Report

வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில் நவம்பர் 13, 2026 அன்று மற்றும் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் டிசம்பர் 5, 2026 அன்று ராகு கேது பெயர்ச்சி நடக்க இருக்கிறது.

இந்த பெயர்ச்சியால் ராகு பகவான் சிம்மத்தில் இருந்து கடக ராசிக்கும் கேது பகவான் கும்பத்தில் இருந்து மகர ராசிக்கும் இடம் மாறுகிறார்கள். இந்த பெயர்ச்சி மேஷ ராசியினருக்கு எப்படி இருக்க போகிறது என்று பார்ப்போம்.

2026 ராகு கேது பெயர்ச்சி.. மேஷ ராசிக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட்..பதவி உயர்வு முதல் பணவரவு வரை | 2026 Aries Raghu Ketu Transit Prediction

2026: நவம்பர் 22 முதல் புதிய திருப்பம்.. சுக்கிர பெயர்ச்சியால் ராஜயோகம் பெறும் ராசிகள்

2026: நவம்பர் 22 முதல் புதிய திருப்பம்.. சுக்கிர பெயர்ச்சியால் ராஜயோகம் பெறும் ராசிகள்

மேஷம்:

இவர்களுக்கு பத்தாம் இடத்தில் ராகவும் நான்காம் இடத்தில் கேதுவும் இருப்பதால் மனதில் இனம் புரியாத பயம் விலகி தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்க கூடிய காலகட்டமாக அமையப் போகிறது. வேலை செய்யும் இடங்களில் உங்களுடைய திறமை வெளிப்படும்.

மூன்றாம் நபரால் தடைபட்டிருந்த காரியங்கள் விலகி முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்த இடமாற்றமும் பதவி, ஊதிய உயர்வுகள் கிடைக்கும். சோம்பேறி தனத்தை மட்டும் விடுத்து சரியான திட்டமிட்டலோடு செயல்பட்டால் வாழ்க்கையில் முன்னேறி விடலாம். வீடுகளில் சுப காரிய விசேஷங்கள் நடக்கும். வாழ்க்கை துணை வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுப்பீர்கள்.

குழந்தைகளால் பெருமை உண்டாகலாம். இனிமையான பேச்சு குடும்பத்தில் நல்ல சூழ்நிலை உருவாக்கும். பிரிந்த நட்பு உறவுகள் மீண்டும் ஒரு சேர வாய்ப்புகள் இருக்கிறது. செய்யக்கூடிய தொழில்களில் நல்ல லாபத்தை சந்திப்பீர்கள்.

2026 ராகு கேது பெயர்ச்சி.. மேஷ ராசிக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட்..பதவி உயர்வு முதல் பணவரவு வரை | 2026 Aries Raghu Ketu Transit Prediction

கும்ப ராசிக்காரர்களுக்கு எந்த நட்சத்திரம் பொருத்தம்? யாருடன் பழகினால் அதிர்ஷ்டம் பெருகும்?

கும்ப ராசிக்காரர்களுக்கு எந்த நட்சத்திரம் பொருத்தம்? யாருடன் பழகினால் அதிர்ஷ்டம் பெருகும்?

கூட்டு தொழிலில் நல்ல மாற்றம் உண்டாகும். வெளிநாட்டு வர்த்தகம் தொடங்க சிறப்பான வாய்ப்புகள் காத்திருக்கிறது. பெரியவர்களின் ஆலோசனை கேட்டு நடப்பதால் சமுதாயத்தில் பெயரும் பெருமையும் அடைவீர்கள். கலை மற்றும் படைப்பு துறையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். மாணவர்களுக்கு நல்ல வளர்ச்சி உண்டாகும்.

தலைவலி, முதுகு, கழுத்து, மூட்டு வலிகள் வந்தால் உடனே கவனித்துக் கொள்வது அவசியம். இந்த காலகட்டங்களில் திருச்செந்தூர் முருகப் பெருமானை மனதார வழிபாடு செய்வது ஏற்றத்தை கொடுக்கும். வாகனங்களில் செல்லும் பொழுது மிகுந்த கவனம் வேண்டும். முடிந்தவரை பகலிலே பயணங்கள் மேற்கொள்வது சிறந்தது.     

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US