2026: நவம்பரில் உருவாகும் புதன் ஆதித்ய யோகம்: நற்செய்தி பெறப்போகும் ராசிகள் யார்

By Sakthi Raj Oct 30, 2026 11:53 AM GMT
Report

ஜோதிட ரீதியாக சூரியன் மற்றும் புதன் ஆகிய கிரகங்கள் இணையும் பொழுது புதன் ஆதித்ய யோகம் உருவாகிறது. அதாவது இந்த 2 கிரகங்களும் ஒரே ராசியில் இயங்கக்கூடிய காலம் ஒரு சிலருக்கு மிகப்பெரிய சாதகமான மாற்றத்தை கொண்டு வந்து சேர்க்கும்.

அந்த வகையில், 2026 ஆம் ஆண்டு அக்டோபர் நான்காம் தேதி அன்று சூரியன் மற்றும் புதன் ஒரே ராசியில் மிகவும் நெருக்கமாக இருக்கிறார்கள். இந்த சேர்க்கை துலாம் ராசியில் நிகழ்கிறது. இதனால் எந்த ராசிகளுக்கு மிகப்பெரிய அளவில் நற்பலன்கள் கிடைக்க போகிறது? நற்செய்தி வந்து சேர போகிறது? என்று பார்ப்போம்.

2026: நவம்பரில் உருவாகும் புதன் ஆதித்ய யோகம்: நற்செய்தி பெறப்போகும் ராசிகள் யார் | 2026 Budhaditya Yoga Bring Luck For 3 Zodiac

ஆற்றைக் கடந்து வந்து அருள் பாலித்த தெய்யம்.. பக்தி பரவசத்தில் ஆழ்ந்த கேரள மக்கள்

ஆற்றைக் கடந்து வந்து அருள் பாலித்த தெய்யம்.. பக்தி பரவசத்தில் ஆழ்ந்த கேரள மக்கள்

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு தொழில் தொடர்பாக எடுக்கக்கூடிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பொறுப்புகள் இவர்களுக்கு வந்து சேரும். பதவி உயர்வு தொடர்பான நல்ல தகவல் கிடைக்கலாம்.

அலுவலகத்தில் அவர்களுடைய திறமையை வெளிப்படுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வருமானம் அதிகரிப்பதற்கான வழியை தேடிக்கொள்வீர்கள்.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த கிரக சேர்க்கை மனதில் தன்னம்பிக்கையை கொண்டு வந்த சேர்க்கப் போகிறது. குடும்பத்தில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகும். உறவுகளிடையே நல்ல புரிதல் உண்டாகும்.

பணம் தொடர்பான விஷயங்களில் நீங்கள் திட்டமிட்டு செயல்படுவதோடு சேமிப்பை அதிகரிப்பீர்கள். ஒரு பெரிய தொகையை செலவிடுவதற்கு முன்பாக கடன் வருமானம் மாதத் தவணை ஆகியவற்றை கணக்கில் கொண்டு செலவு செய்வது அவசியமாக உள்ளது.

பூஜை செய்யும் பொழுது இந்த 5 விஷயங்களை தவறியும் செய்து விடாதீர்கள்

பூஜை செய்யும் பொழுது இந்த 5 விஷயங்களை தவறியும் செய்து விடாதீர்கள்

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு வேலை மற்றும் தொழில் சார்ந்த புதிய வாய்ப்புகள் தேடி வரும். வெளிநாட்டு நிறுவனங்களுடன் தொடர்புடைய வேலைகள் வணிகம் அல்லது வேலை வாய்ப்பு முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

அதோடு தொழில் ரீதியாக இவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்புகளும் தொடர்புகளும் உருவாகலாம். பயணங்கள் வழியாக அறிமுகத்தை பெறுவீர்கள். இருப்பினும் முடிவுகளை எடுக்கும் பொழுது நன்றாக அலசி ஆராய்ந்து பார்த்து எடுப்பது அவசியமாக உள்ளது.     

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US