சனியின் வக்ர பெயர்ச்சி.. ஜூலை 27 முதல் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்

By Sakthi Raj Jun 05, 2026 09:00 AM GMT
Report

 ஜோதிடத்தில் நீதிமானாக இருக்கக்கூடிய சனி பகவான் வருகின்ற ஜூலை 27ஆம் தேதி மீன ராசியில் வக்ர நிலை அடைகிறார். அதாவது பின்னோக்கி நகரிக்கிறார். அதன் பிறகு டிசம்பர் 11ஆம் தேதி அன்று அவர் நேர்கதியில் திரும்புகிறார். இதனால் ஒரு சில ராசிகளுக்கு நன்மையாக இருந்தாலும் ஒரு சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டுமாம். அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

மேஷ ராசியினரின் வாழ நாள் கர்ம பலன்கள் என்ன தெரியுமா ?

மேஷ ராசியினரின் வாழ நாள் கர்ம பலன்கள் என்ன தெரியுமா ?

மீனம்:

மீன ராசிக்கு ஏற்கனவே ஜென்ம சனி நடந்து கொண்டிருப்பதால் இவர்கள் இந்த காலகட்டங்களில் சற்று கவனமாக இருக்க வேண்டும். தேவையில்லாத மன அழுத்தம் குடும்பத்தில் தேவையில்லாத குழப்பங்கள் சண்டை சச்சரவுகள் போன்ற சூழல்கள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். பிள்ளைகள் வாழ்க்கையிலும் அதிக அளவில் அக்கறை செலுத்த வேண்டும்.

கன்னி:

கன்னி ராசியினருக்கு கண்டக சனியில் தாக்கம் இருப்பதால் இவர்கள் இந்த காலகட்டங்களில் கூட்டுத் தொழில் போன்ற விஷயங்களில் அவர்கள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். தொழில் ரீதியாக கூட்டாளிகளுடன் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். கணவன் மனைவியிடையே சிறு சிறு கருத்து மோதல்கள் வரலாம். இந்த காலகட்டங்களில் எந்த ஒரு முடிவையும் அவசரமாக எடுக்க வேண்டாம். நிதானமாக யோசித்து செயல்பட்டால் பிரச்சினைகளிலிருந்து விடுபடலாம்.

சனியின் வக்ர பெயர்ச்சி.. ஜூலை 27 முதல் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் | 2026 July 27 Sani Vakra Peyarchi Palangal

தனுசு:

தனுசு ராசிக்கு அர்த்தாஷ்டம சனி காலம் என்பதால் இவர்கள் இந்த காலகட்டங்களில் உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் வேண்டும். அதேபோல் தாயாரின் உடல் விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி பார்த்துக்கொள்ள வேண்டும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் பொழுது அதில் மிகுந்த கவனம் செலுத்துவது அவசியமாகும். குழந்தைகளிடம் தேவையில்லாத வாக்குவாதம் வைத்துக் கொள்ளாதீர்கள்.

மிதுனம்:

மிதுன ராசிக்கு அஷ்டம சனி காலம் என்பதால் இவர்கள் புதிய தொழில் தொடங்க வேண்டும் அல்லது கடன் வாங்கிய ஏதேனும் பொருட்களை வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தால் அதில் அவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வண்டி வாகனங்களில் செல்லும் பொழுது நிதானத்தை கடைபிடிப்பது அவசியம். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். தேவையில்லாமல் பணத்தை முதலீடுகளில் போடாதீர்கள்.  

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US