2026: பூசத்தில் சுக்கிரன் பெயர்ச்சி: இன்று முதல் ராஜ யோகம் பெறப்போகும் 3 ராசிகள்
ஜோதிட சாஸ்திரத்தில் சுக்கிர பகவான் மிகவும் முக்கியமான நபராக கருதப்படுகிறார். சுக்கிரன் ஒருவர் வாழ்க்கையில் நல்ல நிலையில் இருந்தால் தான் அந்த நபருக்கு மகிழ்ச்சியும் செல்வ வளமும் கிடைக்கும்.
அப்படியாக, சுக்கிரன் தனது ராசியை அல்லது நட்சத்திரத்தை மாற்றும் பொழுது 12 ராசிகளுக்கும் அதனுடைய தாக்கம் இருக்கும்.
அந்த வகையில், 2026 ஆம் ஆண்டு ஜூன் 11ஆம் தேதி மதியம் 2.11 மணிக்கு சுக்கிர பகவான் பூச நட்சத்திரத்திற்குள் இடம் மாறுகிறார். பூச நட்சத்திரத்தை சனிபகவானால் ஆளக்கூடிய நட்சத்திரமாகும். சுக்கிரனும் சனியும் நட்பு ராசியாக இருக்கிறார்கள்.
இதன் விளைவு ஒரு சில ராசிகளுக்கு மிகப்பெரிய அளவில் நிதி முன்னேற்றமும் தொழில் வளர்ச்சியையும் சுகபோக வாழ்க்கையையும் வழங்குகிறது. அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.
ரிஷபம்:
ரிஷப ராசியின் அதிபதி சுக்கிர பகவான் ஆவார். எனவே பூச நட்சத்திரத்தில் நடக்கக்கூடிய சுக்கிரன் பெயர்ச்சியானது இவர்களுக்கு மிகவும் மங்களகரமான பலன்களை கொடுக்கப்போகிறது. புதிய வருமானம் புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உருவாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலையும் ஒரு சிலருக்கு புத்திர பாக்கியமும் வீடு, வாகனம் வாங்கக்கூடிய யோகமும் கிடைக்கும்.
துலாம்:
துலாம் ராசியினருக்கு குழந்தையின் வழியாக நற்செய்தி வந்து சேர போகிறது. இவர்களுக்கு இந்த காலகட்டம் சாதகமான பலனையே பெறப்போகிறார்கள். சமுதாயத்தில் அங்கீகாரமும் வேலையில் உயர் பதவிகளையும் பெறப்போகிறீர்கள். அதுமட்டுமல்லாமல் நீங்கள் போடுகின்ற புதிய திட்டம் மற்றும் தொழில் வளர்ச்சி எல்லாம் உங்களுக்கு சாதகமாக அமையும். திருமண வாழ்க்கையில் இருந்து வந்து கசப்புகள் விலகும்.
மகரம் :
மகர ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் பதவி உயர்வு கிடைக்கப் போகிறது. இவர்களுக்கு வீடுகளில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். வேலை மற்றும் தொழில் ரீதியாக இவர்கள் மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைவார்கள். அலுவலகத்தில் இவர்களுக்கு நல்ல மரியாதையும் ஒரு சிலருக்கு அவர்களுடைய திறமையை பாராட்டி சில வெகுமதிப்புகளும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |