ஒரே நாளில் சூரியன் சுக்கிரன் இரட்டைப் பெயர்ச்சி.. இந்த ராசிகளுக்கு டபுள் அதிர்ஷ்டம்
ஜோதிட ரீதியாக ஒவ்வொரு கிரகமும் அவர்களுடைய குறிப்பிட்ட சில காலத்தில் அவர்களுடைய ராசியையும் நட்சத்திரமும் மாற்றுகிறார்கள். அந்த வகையில் ஜோதிடத்தில் சுக்கிரன் செல்வத்திற்கு அதிபதியாகவும் சொத்து மற்றும் மகிழ்ச்சிக்கு காரணியாகவும் இருக்கிறார்.
அதே நேரத்தில் சூரிய பகவான் வெற்றி பதவி உயர்வு கவுரவம் ஆகியவற்றுக்கு காரணியாக இருக்கிறார். அதாவது, ஜூன் 22ஆம் தேதி அன்று சூரியன் ராகுவுக்கு உரிய ஆருத்ரா நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடைகிறார்.
அதே சமயம், சுக்கிரன் புதனுக்கு உரிய ஆஸ்லேஷா நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடைகிறார். இந்த சூரியன் மற்றும் சுக்கிரன் இரட்டை பெயர்ச்சி குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தையும் செல்வத்தையும் தேடி கொடுக்க போகிறது. அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

துலாம்:
துலாம் ராசிக்கு இந்த் இரைட்டை பெயர்ச்சி இவர்கள் வாழ்க்கையில் ஒரு முன்னேற்றத்தை கொடுக்கப் போகிறது. வீடுகளில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். உங்கள் மீது குடும்பத்தில் வைத்திருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வேலையில் நீங்கள் நீண்ட நாட்கள் சந்தித்து வந்த பிரச்சனைகளிலிருந்து விடுபடுவீர்கள். கணவன் மனைவி இடையே ஒரு நல்ல புரிதல் உண்டாகும்.
மகரம்:
இந்த காலகட்டம் நீங்கள் ஒரு மிகப்பெரிய அளவில் பதவி உயர்வை பெறப்போகிறீர்கள். நீண்ட நாள் காத்திருந்த அரசு பதவிகள் உங்களைத் தேடி வரும். அரசியல் மற்றும் அரசாங்கம் தொடர்பான விஷயங்களால் உங்களுக்கு நல்ல அணுகுலம் கிடைக்கும். புதிய வண்டி வாகனம் வீடு வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும்.
கும்பம்:
இந்த காலகட்டங்களில் உங்களுக்கு வேலையில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். வேலைக்காக திடீர் வெளிநாடு வெளியூர் பயணம் செல்லக்கூடிய யோகம் கிடைக்கலாம். குடும்பத்திற்காக நேரத்தை செலவிடுவீர்காள். அதைப்போல் பிள்ளைகளுக்காக சொத்து சேர்க்கை பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். வண்டி வாகனம் மாற்றக்கூடிய யோகம் கிடைக்கும். வருமானத்தில் உயர்வும் அதில் ஏற்பட்ட தடையும் விலகும் நாள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |