2026: ருத்ர தாண்டவம் ஆடும் ராகு.. மிகவும் கவனமாக இருக்க வேண்டிய 3 ராசிகள்
ஜோதிடத்தில் நிழல் கிரகமாக இருக்கக்கூடிய ராகு கிரகம் மற்ற கிரகங்கள் போல் முன்னோக்கி செல்லாமல் பின்னோக்கி நகரக்கூடியவராக இருக்கிறார். இவர் தான் ஒரு மனிதனுடைய மாயை, ஆசைகள், எதிர்பார்ப்பு, திடீர் திருப்பங்கள் ஆகியவற்றுக்கு காரணமாக அமைகிறார். மேலும், ராகு பெயர்ச்சி என்றாலே எல்லோருக்கும் ஒரு விதமான அச்சம் உண்டாகும்.
காரணம், அவருடைய விளைவுகள் மிகப்பெரிய அளவில் மோசமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. அந்த வகையில், ஜூன் 30-ம் தேதி அவர் அவிட்ட நட்சத்திரத்திற்கு இடம் மாறுகிறார்.
இந்த நட்சத்திரத்தில் ராகு பகவான் ஏப்ரல் 21ஆம் தேதி வரை சஞ்சரிக்கிறார். இதனால் ஒரு சில ராசிகளுக்கு எதிர்மறை தாக்கங்களை கொடுக்க கூடும் என்று நம்பப்படுகிறது. அவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டுமாம். அவர்கள் யார் என்று பார்ப்போம்.

ரிஷபம்:
ராகுவின் நட்சத்திர பெயர்ச்சி ரிஷப ராசியினருக்கு குடும்ப வாழ்க்கையில் ஒரு சில குழப்பங்களை கொடுக்ககூடும். மூன்றாம் நபர்களின் பேச்சுக்களை கேட்பதன் வழியாக சில சிக்கல்களை சந்திப்பீர்கள்.
முதலீடு சார்ந்த விஷயங்களில் மிகுந்த எச்சரிக்கையோடு இருப்பதாக அவசியம். குடும்பத்தில் தேவை இல்லாத வாக்குவாதங்கள், வீண் தகராறுகள் போன்றவை வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. தொழில் ரீதியாக நீங்கள் கொடுத்த வாக்கை காப்பாற்றுவதற்கு முயற்சி செய்வது அவசியமாகும்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு ராகுவின் பெயர்ச்சியால் முக்கியமான சோதனைகள் நடக்கப் போகிறது. இவர்களுடைய பொறுமையை சோதிக்கும் விதத்தில் ஒரு சில சிக்கல்களில் வர காத்திருக்கிறது. வழக்கு விஷயங்கள் இவர்களுக்கு எதிராக திரும்பவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
குடும்ப வாழ்க்கையில் எதிர்பாராத பிரிவுகளை சந்திப்பீர்கள். குடும்பத்தில் பெரியோர்களிடம் தேவையில்லாத வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மை தரும். சம்பள உயர்வு விஷயங்களில் தடை உண்டாகலாம்.
சிம்மம்:
இவர்கள் இந்த காலகட்டங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வெளிநாட்டு தொடர்பான ஏற்றுமதி இறக்குமதி போன்ற வியாபாரங்களில் தேவையில்லாத வாக்குவாதங்களை தவிர்ப்பது அவசியம். யாரிடமும் உங்களுடைய குடும்ப வாழ்க்கையை பற்றி பகிர்ந்து கொள்ளாதீர்கள்.
முக்கியமான முடிவுகள் எடுக்கும் பொழுது குடும்பத்தை ஆலோசித்து எடுப்பது அவசியமாகும். இந்த காலகட்டங்களில் முடிந்தவரை கடன் வாங்குவதையும் கொடுப்பதையும் தவிர்ப்பது உங்களுக்கு நன்மை உண்டாக்கும். ஆடம்பர செலவுகளை முற்றிலும் தவிர்த்து விடுங்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |