2026: மார்ச் 26-ல் நடக்கும் சுக்கிரன் பெயர்ச்சி.. யாருக்கு ராஜயோகம் காத்திருக்கிறது

By Sakthi Raj Mar 22, 2026 10:29 AM GMT
Report

தமிழ் பஞ்சாங்கத்தின் அடிப்படையில் மார்ச் 26ம் தேதி வியாழக்கிழமை அதிகாலை 5.13 மணி அளவில் மேஷ ராசிக்கு சுக்கிர பகவான் இடம் மாறுகிறார். இவர் ஏப்ரல் 19 வரை அங்கு சஞ்சரிக்கிறார். இவருடைய இந்த மாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை உண்டு செய்யும். அப்படியாக சுக்கிரனின் இடமாற்றம் யாருக்கு அதிர்ஷ்டம் என்று பார்ப்போம்.

2026: மார்ச் 26-ல் நடக்கும் சுக்கிரன் பெயர்ச்சி.. யாருக்கு ராஜயோகம் காத்திருக்கிறது | 2026 March 26 Sukiran Peyarchi Prediction

மீன ராசியினருக்கு ராஜயோகம் எப்பொழுது யாரால்? வரும் தெரியுமா?

மீன ராசியினருக்கு ராஜயோகம் எப்பொழுது யாரால்? வரும் தெரியுமா?

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு சுக்கிர பகவானின் இந்த பெயர்ச்சியானது இவர்களுக்கு ஒரு ஆளுமையையும் மனதில் தன்னம்பிக்கையும் கொடுக்கப் போகிறது. நீண்ட நாட்கள் வியாபார ரீதியாக கைகளுக்கு வராத பணம் வந்து சேரும். திருமண வாழ்க்கையில் நிம்மதியை பெறுவீர்கள். திருமணம் தொடர்பான பேச்சு விஷயங்களில் உங்களுக்கு ஆதாயமாக அமையும்.

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் என்ற பெயர்ச்சியானது இவர்களுக்கு வியாபாரத்தில் ஒரு நல்ல லாபத்தை பெற்று கொடுக்கப்போகிறது. வாழ்க்கை துணையுடன் மகிழ்ச்சியான நேரம் செலவிடுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். மாணவர்கள் உயர் கல்வி படிப்பிற்காக வெளிநாடு செல்ல வேண்டும் என்று திட்டமிட்டு இருந்தால் அந்த வாய்ப்புகள் உருவாகும்.

ஜோதிடத்தில் செவ்வாய் சனி சேர்க்கை தோஷமா? அதிர்ஷ்டமா?

ஜோதிடத்தில் செவ்வாய் சனி சேர்க்கை தோஷமா? அதிர்ஷ்டமா?

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த சுக்கிரனின் பெயர்ச்சியானது இவர்களுக்கு சுக்கிர பகவானின் முழு அதிர்ஷ்டத்தையும் பெற்றுக் கொடுக்கப் போகிறது. தொழில் ரீதியாக எதிர்பாராத நல்ல முன்னேற்றத்தை பெறுவார்கள். புதிய தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் உருவாகும். வங்கி தொடர்பான விஷயங்களில் இருந்து வந்து மன கசப்புகள் விலகும். ஆரோக்கியம் மேம்படும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US