2026: நவராத்திரி முதல் நாள் செய்ய வேண்டிய பூஜை மற்றும் வழிபாட்டு முறை விபரங்கள்

Report

நவராத்திரி முதல் நாள் :

நவராத்திரி முதல் மூன்று நாட்களும் அம்பிகையை துர்க்கையாக பராசக்தியாக காளியாக வழிபாடு செய்வது வழக்கம். இந்த ஆண்டு 2026 ஆம் ஆண்டு அக்டோபர் 11ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று நவராத்திரி விழா தொடங்குகிறது.

நாம் முதல் நாள் 10 ஆம் தேதி சனிக்கிழமை அன்று கொலு அமைத்து, கலசம் வைத்து படம் வைத்து அகண்ட தீபம் ஏற்றி துவங்கிவிடலாம். அந்த வகையில், நவராத்திரி முதல் நாள் வழிபாடு செய்யும் முறை ? நெய்வேத்தியம் படைக்கும் பற்றி பார்ப்போம்.

2026: நவராத்திரி முதல் நாள் செய்ய வேண்டிய பூஜை மற்றும் வழிபாட்டு முறை விபரங்கள் | 2026 Navratri Day 1 Puja Rituals Guide

எந்த முருகன் கோவிலுக்கு சென்றால் என்ன பலன் என்று தெரியுமா ?

எந்த முருகன் கோவிலுக்கு சென்றால் என்ன பலன் என்று தெரியுமா ?

நவராத்திரி 2026 முதல் நாள் வழிபாட்டு நேரம் :

நவராத்திரி 2026 முதல் நாள்: அக்டோபர் 11 ஞாயிறு

கொலு பொம்மை அடுக்க நல்ல நேரம்: காலை 06.00 முதல் 08.00 வரை

பூஜை துவங்கும் நேரம்: காலை 08.10 முதல் 09.00 வரை,மாலை 06.00 மணிக்கு மேல்

நவராத்திரி 2026 முதல் நாள் அலங்காரம், நைவேத்தியம் :

அம்பிகையின் பெயர் : உமா மகேஸ்வரி

கோலம் :பொட்டு வகை கோலம்

மலர் : மல்லிகை

இலை : வில்வம்

நைவேத்தியம் : வெண்பொங்கல்/ சுண்டல்

ராகம் : தோடி

நிறம் : பச்சை

நவராத்திரி முதல் நாள் வழிபாட்டு முறை :

நவராத்திரி முதல் நாளில் காலையில் ஏதேனும் ஒரு பழம் கற்கண்டு ஆகியவற்றை படைத்து வழிபாட்டை துவங்கலாம். மாலை நேரங்களில் கண்டிப்பாக ஏதாவது நெய்வேத்தியம் படைத்து வழிபாடு செய்ய வேண்டும். முதல் நாளில் வெண்பொங்கல், சுண்டல்தான் படைக்க வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை.

முதல் நாள் என்பதால் சர்க்கரை பொங்கல் படைத்து கட்டாயம் வழிபாடு செய்யலாம். மேலும், நவராத்திரி அந்தந்த நாட்களில் குறிப்பிடப்படும் மலர்கள் நெய்வேத்தியம் கொண்டு தான் அம்பிகையை வழிபட வேண்டும் என்பதும் அவசியம் இல்லை. நம்மால் என்ன மலர்கள் கொண்டு வழிபாடு செய்ய முடியுமோ, நெய்வேத்தியம் படைக்க முடியுமோ அதனைக் கொண்டு மனதார அம்பிகையை வழிபாடு செய்யலாம்.

2026: நவராத்திரி முதல் நாள் செய்ய வேண்டிய பூஜை மற்றும் வழிபாட்டு முறை விபரங்கள் | 2026 Navratri Day 1 Puja Rituals Guide

2026: நவராத்திரி கொலு, கலசம் வைப்பதற்கு உகந்த நேரம் என்ன?

2026: நவராத்திரி கொலு, கலசம் வைப்பதற்கு உகந்த நேரம் என்ன?

காலையில் ஒரு பழம் படைத்து அம்பிகைக்குரிய ஒரு ஸ்லோகம் பாடி கட்டாயமாக வழிபாடு செய்வது நல்ல பலன்களை பெற்றுக் கொடுக்கும். மாலையில் அம்பிகைக்கு குங்குமம், மலர்கள் என ஏதாவது ஒன்றை வைத்து அர்ச்சனை செய்து வழிபாடு செய்யலாம்.

நவராத்திரி காலங்களில் அம்பிகைக்குரிய அபிராமி அந்தாதி, லலிதா சகஸ்ரநாமம், துர்காஷ்டகம், காமாட்சி அஷ்டகம், 108 அம்பாள் போற்றி மந்திரங்கள் ஆகியவற்றை ஏதாவது ஒன்றை நாம் தினமும் பாராயணம் செய்து வழிபாடு செய்யலாம். பிறகு அம்பிகைக்கு தீப ஆராதனை காட்டி பூஜையை நிறைவு செய்ய வேண்டும். வீடுகளுக்கு வந்திருப்பவர்களுக்கு பிரசாதம் தாம்பூலம் ஆகியவை கொடுத்து உபசரிக்க வேண்டும்.     

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US