Numerology: உங்களுக்காக 2026- ல் என்ன காத்திருக்கிறது தெரியுமா?

By Sakthi Raj Dec 17, 2025 11:00 AM GMT
Report

இந்த பூமி இயங்க முக்கிய காரணம் கிரகங்களுடைய செயல்பாடுகள் தான். அந்த கிரகங்களானது நம்முடைய வாழ்க்கையிலும் ஜோதிட ரீதியாக மிகப்பெரிய அளவில் தாக்கத்தை கொடுக்கிறது. அந்த வகையில் 2026 புது வருடம் இன்னும் சிறிது தினங்களிலே பிறகு இருக்கின்ற நேரத்தில் 2026ம் ஆண்டு மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து வரவேற்க பலரும் காத்திருக்கிறார்கள்.

அதாவது, 2026 ஆம் ஆண்டு ஒரு புதிய தொடக்கமாகவும் மிகச் சிறந்த மாற்றத்தை கொடுக்க கூடியதாகவும் அமையும் என்ற நம்பிக்கையில் எல்லோரும் காத்திருக்கின்ற நேரத்தில் 2026 ஆம் ஆண்டு எண் கணித ரீதியாக ஒவ்வொரு எண்ணில் பிறந்தவர்களுக்கு என்ன பலன்களை கொடுக்க உள்ளது என்பதை பற்றி பார்ப்போம்.

Numerology: உங்களுக்காக 2026- ல் என்ன காத்திருக்கிறது தெரியுமா? | 2026 Numerology Prediction According Birth Date 

நீங்கள் பிறந்த தேதி இதுவா? அப்போ உங்களுக்கு கட்டாயம் காதல் திருமணம் தானாம்

நீங்கள் பிறந்த தேதி இதுவா? அப்போ உங்களுக்கு கட்டாயம் காதல் திருமணம் தானாம்

எண் 1:

2026 ஆம் ஆண்டு நிச்சயம் இவர்களை பல முக்கியமான விஷயங்களை நோக்கி நகர்த்தி செல்ல போகிறது. அது மட்டுமல்லாமல் சுயமாகவும் சுதந்திரமாகவும் இவர்கள் செயல் பட போகிறார்கள். புதிய வாய்ப்புகள் தொழிலில் காத்திருக்கிறது. ஒரு சிலர் வேலை மாற்றம் அல்லது புதிய தொழில் தொடங்குவதை பற்றி யோசிப்பார்கள்.

எண் 2:

2026 ஆம் ஆண்டு கட்டாயமாக இவர்கள் ஒரு அமைதியையும் நிதானத்தையும் கடைபிடிக்க வேண்டும். இந்த வருடம் பாதிக்கு மேல் இவர்களுக்கு ஒரு காதல் மலர்வதற்கான வாய்ப்புகள் இருந்தாலும், இவர்கள் காதல் குடும்பம் இவ்வாறான உறவுகளின் நிறைய நெருக்கடிகளை சந்திக்கப் போகிறார்கள். பொறுமையை கடைப்பிடித்தால் மட்டுமே இவர்களுக்கு இந்த ஆண்டு நிம்மதி.

எண் 3:

2026 ஆம் ஆண்டு இவர்களின் பேச்சு திறமை மற்றும் கலை திறமை மிக சிறப்பாக வெளிவரப் போகிறது. எழுத்து துறையில் இருப்பவர்களுக்கு நிறைய வாய்ப்புகள் தேடி வரும். ஆசிரியர் பணியில் உள்ளவர்களுக்கு பாராட்டு விருதுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. பொருளாதார ரீதியாக கேட்ட இடங்களில் இருந்து இவர்களுக்கு பணம் கிடைத்து மிகச் சிறந்த முன்னேற்றத்தை நோக்கி செல்ல போகிறார்கள்.

பலரும் அறிந்திடாத சக்திவாய்ந்த லிங்கம்- மார்கழி மாதத்தில் மட்டுமே காணலாம்

பலரும் அறிந்திடாத சக்திவாய்ந்த லிங்கம்- மார்கழி மாதத்தில் மட்டுமே காணலாம்

எண் 4:

2026 ஆம் ஆண்டு இவர்கள் எதிர்கால வாழ்க்கைக்கு தேவையான அடித்தளத்தை மிகச் சரியாகவும் வலிமையாகவும் தயார் செய்யக்கூடிய அற்புதமான ஆண்டு. ஒழுக்கமாகவும் நேர்மையாகவும் இவர்கள் நடந்து கொள்வதால் சனி பகவானுடைய அருளை பெறப்போகிறார்கள். அலுவலகத்தில் இவர்களுக்கு உயர் பதவிகளை தேடி வர காத்திருக்கிறது. தேவையில்லாத நபர்களுடைய உறவுகளை தைரியமாக இவர்கள் துண்டித்து விடுவார்கள்.

எண் 5:

2026 ஆம் ஆண்டு இவர்களுக்கு எல்லா விஷயங்களும் எதிர்பாராத நேரங்களில் மட்டுமே நடக்கப் போகிறது. உறவுகளாக இருக்கட்டும் தொழிலாக இருக்கட்டும் எல்லாம் இவர்கள் எதிர்பாராத நேரத்தில் இவர்களுடைய கதவுகளை தட்டி இவர்களுக்கு நிறைய வாய்ப்புகள் கொடுக்க காத்திருக்கிறது. மிக சுதந்திரமாக இவர்கள் செயல் பட்டு அவர்களுடைய திறமையை வெளிக்காட்டி பாராட்டுகளை பெற காத்திருக்கிறார்கள்.

எண் 6:

2026 ஆம் ஆண்டு முக்கியமான வாழ்க்கை முடிவை எடுக்க தள்ளப்படுவார்கள். அதாவது இவர்கள் குடும்ப ரீதியாக ஒரு முக்கியமான முடிவுகளை எடுப்பதற்காக ஒரு சில குழப்பங்களை சந்திக்க நேரலாம். இருந்தாலும் வருடத்தின் பாதிக்கு மேல் நிச்சயம் இவர்களுக்கு மனதில் தெளிவும் இவர்களுக்கு சாதகமாகவும் அமையப் போகிறது. தொழில் ரீதியாக நிச்சயம் கடினமான உழைப்புகளை போடப் போகிறீர்கள்.

இந்த ராசியில் பிறந்த நபர் வீடுகளில் இருந்தால் கோடீஸ்வர யோகம் நிச்சயமாம்

இந்த ராசியில் பிறந்த நபர் வீடுகளில் இருந்தால் கோடீஸ்வர யோகம் நிச்சயமாம்

எண் 7:

2026 ஆம் ஆண்டு மனரீதியாக ஒரு நல்ல தெளிவு பிறக்க போகிறது. தேவையில்லாத விஷயங்களில் இருந்து விடுபட்டு இவர்களுடைய இலட்சியத்திற்காக போராடி ஜெயிக்க கூடிய ஒரு அற்புதமான ஆண்டாக அமைக்கப் போகிறது. இவர்கள் ஆன்மீக ரீதியாகவும் நல்ல வளர்ச்சி அடைவார்கள். உணர்வுகள் ரீதியாக நிறைய பாதிப்புகளை சந்தித்து வந்தவர்களுக்கு நிச்சயம் இந்த ஆண்டு அவர்கள் அதிலிருந்து விடுபடுவதற்கான காலம்.

எண் 8:

2026 ஆம் ஆண்டு பொருளாதாரத்தில் மிகச் சிறந்த முன்னேற்றம் கொடுக்கப் போகிறது. இந்த ஆண்டு இவர்கள் நீண்ட நாள் காத்திருந்த ஒரு நல்ல முடிவு கிடைக்கப்போகிறது. வேலைக்காக இவர்கள் போட்ட கடின உழைப்புகளுக்கு நல்ல பெயர் கிடைக்கப் போகிறது. சமுதாயத்தில் எவராலும் அசைக்க முடியாத ஒரு நிலையை இவர்கள் இந்த ஆண்டு பெற போகிறார்கள்.

எண் 9:

2026 ஆம் ஆண்டு கட்டாயமாக இவர்களுக்கு மனநிலையில் நிறைய மாற்றங்கள் உண்டாகும். அதாவது தொழில் ரீதியாகவும் சரி உறவுகள் ரீதியாகவும் சரி, இவர்களுக்கு குழப்பங்கள் ஏற்பட்டு பிறகு ஒரு நல்ல முடிவு கிடைக்கும். இந்த ஆண்டு தொடக்கத்தில் சற்று தடைகளும் மனக்கவலைகளும் இருந்தாலும் அதிலிருந்து விடுபட்டு ஒரு நல்ல வாழ்க்கை புரிதலை இவர்கள் நிச்சயம் இந்த ஆண்டு பெறுவார்கள். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US