2026: ராகு பார்வை ஆரம்பம்.. அடுத்த சில மாதங்களுக்கு இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்

By Sakthi Raj Oct 08, 2026 10:22 AM GMT
Report

ஜோதிடத்தில் நிழல் கிரகமாக இருக்கக்கூடிய ராகு பகவான் மிகவும் முக்கியமான கிரகமாக இருக்கிறார். அந்த வகையில் ராகு பகவான் அவிட்ட நட்சத்திரத்தின் மூன்றாம் கட்டத்தில் பெயர்ச்சி ஆகுவது சில ராசிகளுக்கு மிகவும் நேர்மறையான பலன்களை கொண்டு வந்து சேர்க்கப்போகிறது.

அதனால், அவர்கள் சில மாதங்களுக்கு பொற்காலம் அனுபவிக்கப் போகிறார்கள். அக்டோபர் மூன்றாம் தேதி ராகு பகவான் அவிட்டம் நட்சத்திரத்தின் மூன்றாம் கட்டத்தில் பெயர்ச்சி அடைந்திருக்கிறார்.

இந்த நட்சத்திரத்தின் அதிபதி செவ்வாய் பகவான் ஆவார். இந்த நட்சத்திரம் மாற்றம் ஒரு சில ராசிகளுக்கு நேர்மறையான வாய்ப்புகளை கொடுக்கப்போகிறது. அவர்கள் யார் என்று பார்ப்போம்.

2026: ராகு பார்வை ஆரம்பம்.. அடுத்த சில மாதங்களுக்கு இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம் | 2026 Raghu Avittam Nakashtara Peyarchi Palangal

சிம்மாசனத்தில் அமர வைக்கும் லலிதா சகஸ்ரநாமம்..

சிம்மாசனத்தில் அமர வைக்கும் லலிதா சகஸ்ரநாமம்..

கடகம்:

இவர்களுக்கு இந்த காலகட்டத்தில் நினைத்த காரியங்கள் நிறைவேறப்போகிறது. நீண்ட நாட்களாக முடியவே முடியாது என்று எண்ணிய காரியங்கள் கூட நீங்கள் எளிதாக முடித்து விடக்கூடிய அமைப்பை கொடுக்கப் போகிறார்.

உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு நல்ல ஆதரவு இருக்கும். வாழ்க்கை துணையுடன் புரிதல் உண்டாகும். மனதில் இருந்த கவலைகள் எல்லாம் விலகும்.

சிம்மம்:

இவர்களுக்கு இந்த காலகட்டம் ய வீடு வாகனமாக கூடிய யோகம் உருவாகும். வேலை செய்யும் இடங்களில் உங்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும்.

அரசு வேலையில் நல்ல அனுகூலம் உண்டாகும். பிரச்சனைகளுக்கு தகுந்த மாதிரியான ஒரு நல்ல தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு நீங்கள் பெறுவீர்கள்.

தோல்வியை அடியோடு வெறுக்க கூடிய ராசிகள் யார் தெரியுமா?

தோல்வியை அடியோடு வெறுக்க கூடிய ராசிகள் யார் தெரியுமா?

கும்பம்:

இவர்களுக்கு இந்த காலகட்டம் உடன் பிறந்தவர்களுடைய உதவி கிடைக்கப் போகிறது. கலை சார்ந்த துறைகளில் நல்ல ஈடுபாடு உண்டாகும். எதையும் சமாளிக்க கூடிய பக்குவம் கிடைக்கும்.

எண்ணிய காரியங்களில் நிறைவேற்றக்கூடிய வாய்ப்புகள் உருவாகும். உறவுகள் வழியே நல்ல ஒத்துழைப்பை பெறுவீர்கள். நண்பர்கள் வழியே வருமானம் உயர்த்துவதை பற்றிய திட்டமிடுவீர்கள். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US