2026 ராகு கேது பெயர்ச்சி: 6 ராசிகளுடைய வாழ்க்கையே மாறப் போகிறதாம்
நிழல் கிரகமாக இருக்கக்கூடிய ராகு கேது அவர்களுடைய ராசிகளை குறிப்பிட்ட இடைவேளையில் மாத்துகிறார்கள். அந்த வகையில், இந்த மாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகளுக்கு மிகப்பெரிய அளவில் நன்மையை செய்கிறது.
அப்படியாக, 2026 ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி ராகு பகவான் அவர்களுடைய கும்ப ராசியில் இருந்து மகர ராசிக்கும் கேது சிம்ம ராசியில் இருந்து கடக ராசிக்கும் மாறுகிறார்கள். இந்த மாற்றம் 2027 ஆம் ஆண்டு முழுவதும் இருக்கப்போகிறது.
இதனால் ஒரு சில ராசிகளுக்கு அவர்களுடைய வாழ்க்கையே தலைகீழாக மாறப்போகிறது. அதாவது சில நன்மைகள் நடக்கப்போகிறது. அவர்கள் யார் என்று பார்ப்போம்.

மிதுனம்:
இவர்களுக்கு ராகு கேது பெயர்ச்சி மிகப்பெரிய அளவில் நன்மையை சேர்க்கப்போகிறது. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் உண்டாகும். மிகவும் சாதகமான பலன்களை பெற போகிறார்கள்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய அளவில் நற்செய்தி வந்து சேர போகிறது. தொழில் ரீதியாக நல்ல லாபம் கிடைக்கும். வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மிகச் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு ராகு கேது பெயர்ச்சியானது மிகப்பெரிய அளவில் நற்பலன்களை கொண்டு வந்து சேர்க்க போகிறது.
குழந்தைகளால் இவர்களுக்கு நன்மை கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல வெற்றி வாய்ப்புகள் உருவாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில் ரீதியாக மங்களகரமான விஷயங்கள் நடைபெறும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசி காரர்களுக்கு ராகுவின் பரிபூரண அருள் கிடைக்க போகிறது. இவர்களுக்கு வீடுகளில் மங்களகரமான காரியங்கள் நடைபெறும்.
வாழ்க்கையில் நிறைய விஷயங்கள் இவர்களுக்கு சாதகமான வாய்ப்புகளை கொடுக்கும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு கேது பெயர்ச்சி மிகவும் சாதகமான நற்பலன்களை கொண்டு வந்து சேர்க்கப் போகிறது. இவர்களுக்கு தொழில் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
நிதி நிலை சீராக இருக்கும் கேது பகவானின் அருளால் இந்த காலகட்டங்களில் இவர்களுக்கு பண வரவு அதிகரிக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |