ஆரம்பம் ஆகும் சுக்கிரன் பெயர்ச்சி: பெயர் புகழ் பெரும் ராசிகள் யார்?

By Sakthi Raj Mar 09, 2026 10:05 AM GMT
Report

  ஜோதிடத்தில் ஒன்பது கிரகங்களில் ஒருவருக்கு அழகு, புகழ், ஆடம்பரம், காதல் ஆகியவற்றை கொடுக்கக் கூடியவர் சுக்கிர பகவான். இவர் 2026 ஆம் ஆண்டு கடந்த மார்ச் 3 ஆம் தேதி குரு பகவானின் மீன ராசிக்குள் நுழைந்தார்.

இதனால் மாளவ்ய ராஜயோகம் உருவாகி மிகப்பெரிய அளவில் அதிர்ஷ்டத்தை குறிப்பிட்டு சில மூன்று ராசிகளுக்கு கொடுக்க இருக்கிறது. அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

ஆரம்பம் ஆகும் சுக்கிரன் பெயர்ச்சி: பெயர் புகழ் பெரும் ராசிகள் யார்? | 2026 Sukiran Peyarchi Astrology Prediction

தவறியும் இந்த 4 விஷயங்கள் செய்யாதீர்கள்.. நல்ல கர்மாவை அது பாதிக்குமாம்

தவறியும் இந்த 4 விஷயங்கள் செய்யாதீர்கள்.. நல்ல கர்மாவை அது பாதிக்குமாம்

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த சுக்கிர பெயர்ச்சியானது இவர்களுக்கு வேலையில் ஒரு நல்ல மரியாதையும், புகழையும் தேடிக் கொடுக்கப் போகிறது. கலை துறையில் இருப்பவர்களுக்கு புதிய நட்புகளும், நட்புகளால் முன்னேற்றமும் கிடைக்கப் போகிறது. சமுதாயத்தில் இழந்த அந்தஸ்தை மீண்டும் பெறுவீர்கள்.

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த சுக்கிர பெயர்ச்சியானது இவர்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் பண வரவை அதிகரிக்கப் போகிறது. பிள்ளைகள் நல்ல முன்னேற்றத்தையும் படிப்பில் சிறந்தும் விளங்குவார்கள். திருமணமாகாதவர்களுக்கு இந்த காலகட்டங்களில் நல்ல வரன் தேடி வரும்.

வாஸ்து: வீட்டில் குப்பை தொட்டியும் அதிர்ஷ்டம் தருமாம்.. எப்படி தெரியுமா ?

வாஸ்து: வீட்டில் குப்பை தொட்டியும் அதிர்ஷ்டம் தருமாம்.. எப்படி தெரியுமா ?

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு இந்த சுக்கிர பெயர்ச்சியானது இவர்களுக்கு மிகப்பெரிய அளவில் நன்மையை செய்யப்போகிறது. இவர்களின் தோற்றம் இந்த காலகட்டங்களில் வசீகரமாக மாறும். இவர்களுடைய பேச்சாள் நினைத்ததை சாதிப்பார்கள். நீண்ட நாட்கள் முடிவுக்கு வராத வேலை ஒரு நல்ல முடிவை பெறும். புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.   

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US