2026: தமிழ் புத்தாண்டு: கடகம் முதல் மீன ராசி வரை எப்படி இருக்க போகிறது?
ஜோதிடத்தில் ஒவ்வொரு தமிழ் மாதம் பிறப்பின் பொழுதும் சூரிய பகவான் அவர் தன்னுடைய ராசியை மாற்றுவார். அதாவது, தமிழ் வருடப்பிறப்பான சித்திரை வருட பிறப்பில் சூரிய பகவான் முதல் ராசியான மேஷ ராசியில் சஞ்சரிப்பார்.
இதனுடைய தாக்கம் 12 ராசிகளுக்கும் உண்டாகும். அப்படியாக தமிழ் புத்தாண்டு கடக ராசி முதல் மிதுன ராசி வரை எப்படி இருக்க போகிறது என்று பார்ப்போம். கடக ராசியை பொறுத்தவரை இவர்களுக்கு சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு பொற்காலம் பிறக்க போகிறது. காரணம் குரு பகவான் கடக ராசியில் உச்சம் பெறுகிறார்.
அதுமட்டுமல்லாமல் குரு பெயர்ச்சி கடக ராசியில் நடக்க இருப்பதால் கட்டாயமாக இவர்களுக்கு அந்தப் பெயர்ச்சி மிகப்பெரிய அளவில் வாழ்க்கையில் முன்னேற்றத்தை கொடுக்க கூடும் என்று நம்பப்படுகிறது. சிம்ம ராசிக்கு அஷ்டமத்து சனி நடக்கிறது.
அஷ்டமத்து சனி என்றால் எல்லோரும் அச்சம் கொள்வார்கள். ஆனால் அஷ்டமத்து சனி மற்றும் எழிரை சனி காலங்களில் வாழ்க்கையில் மிகப் பெரிய அளவில் உயர்ந்த நிலைக்கு சென்ற பிரபலங்களும் இருக்கிறார்கள் என்பதால் இவர்கள் பயப்பட தேவையில்லை.
மிகப் பெரிய அளவில் திடீர் மாற்றத்தை இவர்கள் வாழ்க்கையில் சந்திக்கப் போகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. கன்னி ராசிக்காரர்களுக்கு தமிழ் புத்தாண்டு முன்னிட்டு திருமணம் ஆகாதவர்களுக்கு கட்டாயம் இந்த காலகட்டங்களில் திருமணம் நடக்கும்.
இருப்பினும் இவர்கள் நண்பர்களுடன் சற்று கவனமான முறையில் உறவுகளை வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்கள். நெருங்கிய நண்பர்களால் இவர்களுக்கு ஆபத்து வரக்கூடும் என்பதால் எச்சரிக்கையாக சில முக்கிய முடிவுகளை எடுப்பதால் நன்மை உண்டாகும்.
அடுத்ததாக, துலாம் ராசிக்கு இந்த புத்தாண்டு மிகப்பெரிய அளவில் அங்கீகாரத்தை இவர்களுக்கு தேடி கொடுக்கப்போகிறது. இருப்பினும் இவர்களுக்கு பத்தாம் இடத்தில் குரு பகவான் வருவதால் ஒரு சிலர் பதவி பறிபோகிவிடும் என்ற பயம் கொள்வார்கள்.
இவர்களுக்கு பதவிகள் மாற்றங்கள் வரக்கூடும். இவர்கள் வாழ்க்கையில் அடுத்த கட்ட முன்னேற்றத்திற்கு செல்லக்கூடிய வாய்ப்புகளை பெறப் போகிறார்கள். விருச்சிக ராசி பொருத்தவரை இவர்களுக்கு இந்த காலகட்டம் அலுவலகத்தில் முக்கியமான பொறுப்புகள் தேடி வரும்.
ஆனால் அவர்கள் முக்கியமான பொறுப்புகளில் அமரும் பொழுது தேவையில்லாத முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
அப்படியாக இன்னும் ஜோதிட ரீதியாக கடகம் முதல் மீனம் வரை தமிழ் புத்தாண்டு எப்படி இருக்க போகிறது என்று பிரபல ஜோதிட நங்கநல்லூர் பஞ்சநாதன் அவர்கள். அதைப்பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்ப்போம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |