2026: வரலட்சுமி விரதம் எப்பொழுது? வழிபாடு செய்யும் சரியான முறை என்ன?
வீடுகளிலேயே பெண்கள் கொண்டாட கூடிய ஒரு முக்கியமான பண்டிகைகளில் வரலட்சுமி விரதம் ஒன்று. இந்த நாளில் பெண்கள் விரதம் இருந்து வழிபாடு செய்வதால் அவர்களுடைய குடும்ப நலன் மேம்படும். அதோடு, அவர்களுக்கு மகாலட்சுமியின் முழு அருள் கிடைக்கின்றது.
வரலட்சுமி விரதம் முக்கியமாக பெண்கள் அவர்களுடைய கணவருக்காக இருக்கக்கூடிய முக்கியமான விரதத்தில் ஒன்றாகும். அதோடு, தொழிலில் சிறந்து விளங்கவும், செல்வ வளம் கிடைக்கவும், குழந்தைகளுடைய மகிழ்ச்சி நிறைவாக இருக்கவும் இந்த மகாலட்சுமி விரதத்தை மேற்கொள்கின்றோம்.
திருமணமான பெண்கள் மட்டுமல்லாமல் கன்னி பெண்களும் இந்த விரதம் கடைபிடித்து வழிபாடு செய்கின்ற பொழுது அவர்களுக்கு நல்ல வரன் கிடைப்பதோடு திருமணத்திற்கு பிறகு ஒரு நல்ல குழந்தை பாக்கியம் உருவாகிறது.
அந்த வகையில், இந்த 2026 ஆம் ஆண்டு வரலட்சுமி விரதம் எப்பொழுது? நாம் விரதம் கடைபிடிக்கும் முறையை பற்றி பார்ப்போம்.
இந்த ஆண்டு வரலட்சுமி விரதம் ஆகஸ்ட் 21ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று வருகிறது. இந்த நாள் காலை 9:15 முதல் 10 15 வரையிலும் மாலை 4:45 மணி முதல் 545 மணி வரையிலும் நல்ல நேரமாக இருக்கிறது. இந்த நேரத்தில் நாம் பூஜை செய்து வழிபாடு செய்வது சிறப்பு.
வழிபாடு செய்யும் முறை:
வரலட்சுமி விரதம் மேற்கொள்ளும் பெண்கள் முதல் நாள் அன்று வீடுகளை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பிறகு அரிசி மாவில் கோலம் போட்டு மாவிலை தோரணம் கட்ட வேண்டும். வீட்டினுடைய தென்கிழக்கு மூலையில் ஒரு இடத்தில் சாணம் தெளித்து அதன் மீது மரப்பலகை சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அதன் மீது அரிசி மாவு கோலம் போட்டுக்கொண்டு மரப்பலகை மீது உங்களிடம் இருக்கக்கூடிய தாம்பாலம் அல்லது வாழை இலை போட்டுக் கொள்ள வேண்டும். அதன் மீது மகாலட்சுமி தேவியை மனதார பிரார்த்தனை செய்து பச்சரிசி அல்லது மூன்று கைப்பிடி வைத்து பரப்ப வேண்டும். பிறகு ஒரு சொம்பு உள்ளே அரிசி, மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு நாணயங்கள் முடிந்தவர்கள் ஒரு தங்க காசை போடலாம் பிறகு ஜாதிக்காய். மாசிக்காய்.
ஏலக்காய். கிராம்பு, எலுமிச்சை பழம் கருமணி இவை உள்ளே போட வேண்டும். வாசனைப் பொருட்களும் போட்டுக் கொள்ளலாம். இந்த கலசத்தில் வாய் பகுதியில் மாவிலை வைத்து அதன் மீது தேங்காய் வைத்துக் கொள்ள வேண்டும். தேங்காயில் மஞ்சள் பூசி குங்குமம் இட்டு அம்மன் திரு முகத்தை வைக்க வேண்டும்.
அவரவர் வசதிக்கேற்ப அம்மனுடைய முகத்தை அலங்கரித்துக் கொள்ளலாம். பிறகு அம்மனுக்கு கலசத்தின் மீது புதிதாக வாங்கிய மஞ்சள் அல்லது சிகப்பு நிறை பட்டாடை கட்ட வேண்டும் அல்லது புதிய புடவை ஜாக்கெட் துணியை கட்டலாம். அம்பாள் அலங்காரம் செய்வதற்காக நகைகள் இருந்தால் அதை வைத்து அலங்கரித்திக் செய்யலாம்.

விரதம் இருந்தால் கிடைக்கும் பலன்கள்:
வரலட்சுமி விரதம் இருப்பவர்களுக்கு தனம், ஐஸ்வர்யம், சந்தான பாக்கியம், செல்வம், நீண்ட ஆயுள் தீர்க்க சுமங்கலி வரம் ஆகியவை கிடைக்கும். நோன்பு மஞ்சள் சரடை கும்பத்தில் வைத்து சரடையும் கும்பத்துடன் சேர்த்து பூஜை செய்து கொள்ள வேண்டும்.
பிறகு மலர்களால் தீபங்களால் அம்பாளை ஆராதனை செய்து 9 இழைகள் கொண்ட மஞ்சள் சரடு எடுத்து வலது மணிக்கட்டில் பக்தியோடு கணவரிடம் கொடுத்து அல்லது மூத்த சுமங்கலியை கட்டிவிட சொல்லலாம். அதோடு பெண்களுக்கு நோன்பு கயிறு கொடுக்க வேண்டும்.
தெரிந்த பெண்களை வீட்டிற்கு அழைத்து அம்பிகையை மனதார நினைத்து உணவு கொடுத்து வெற்றிலை பாக்கு, மஞ்சள், குங்குமப்பூ, ரவிக்கை துணி இனிப்பு, பழம் ஆகிய பொருட்களை தாம்பூலமாக கொடுத்து உபசரிக்க வேண்டும்.
இவ்வாறு செய்வதால் குடும்பத்தில் பெண்களுக்கு ஏற்பட்ட தோஷம் விலகும், கணவனுடைய ஆயுள் கிடைக்கும், உடல் நலன் செல்வம் அமைதி ஆகியவை மகாலட்சுமி அருளால் பெறலாம். பூஜை செய்த அன்று மாலை பூஜைக்கு பயன்படுத்தி தேங்காய் பச்சரிசி வைத்துவிட்டு கலசத்தை அரிசி பானையில் வைத்துவிட வேண்டும்.
மறுநாள் காலை எளிமையாக பூஜை செய்து விரதத்தை முடித்துக் கொள்ளலாம். இதன் மூலம் அன்னபூரணியின் முழு அருளும் கிடைக்கும். அதோடு சந்தனத்தால் செய்யப்பட்ட அம்மனின் சிலையை மறுநாள் நீர் நிலைகளை கரைத்து விட வேண்டும்.
பிறகு மறு வெள்ளிக்கிழமை அன்று பாயாசம் செய்து நெய்வேத்தியம் செய்யலாம். இவ்வாறு முழு மனதார வரலட்சுமி விரதத்தை மேற்கொள்ளும் பொழுது நிச்சயம் வாழ்க்கையில் நல்ல பலன்கள் கிடைக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |