மிகவும் பிடிவாத குணம் கொண்ட 3 ராசிகள் யார் தெரியுமா?
மனிதர்களிடம் பிடிவாத குணத்தை நாம் அவ்வப்போது பார்க்கமுடியும். மேலும், ஒருவருக்கு பிடிவாத குணம் கட்டாயம் இருக்க வேண்டும் அப்பொழுது தான் அவர்கள் நினைத்ததை சாதிக்கும் மன வலிமை இருக்கும்.
இருந்தாலும் ஒரு சிலருக்கு இந்த பிடிவாத குணம் அதீத அளவில் இருப்பதை நாம் பார்க்கலாம். அதாவது அவர்கள் தேவை இல்லாத விஷயங்களுக்கு கூட வீண் பிடிவாதம் பிடித்துக்கொண்டு இருப்பார்கள். அப்படியாக, எந்த ராசியினர் அதிக அளவில் பிடிவாதம் கொண்டு இருப்பார்கள் என்று பார்ப்போம்.
மகரம்:
மகர ராசியினர் அவ்வளவு எளிதாக எதையும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். மேலும், இவர்கள் ஒரு விஷயத்தை மனதில் நினைத்து விட்டால் அதை முடிக்கும் வரை அவர்களால் தூங்கமுடியாது. மேலும், இவர்களை நெருங்கிய நபர்களால் கூட மனதை மாற்ற முடியாது. ஒன்றை நினைத்து விட்டால் அதை செய்து முடித்தே ஆக வேண்டும் என்று தீர்க்கமாக இருப்பார்கள்.
சிம்மம்:
சிம்ம ராசியினர் இயல்பாகவே ஆளுமை திறன் கொண்டவர்கள். அதோடு இவர்கள் ஒரு முயற்சியை கையில் எடுத்துவிட்டால் அதை அவ்வளவு எளிதாக விட்டுக்கொடுக்க மாட்டார்கள். கடைசி நிமிடத்திலும் கூட வெற்றி தன் வசம் ஆகும் என்று முழுமனதோடு போராடும் குணம் படைத்தவர்கள். அதே போல், இவர்களுக்கு ஒன்று பிடித்து விட்டால் அது பிடித்து விட்டது தான் அதில் இருந்து அவர்கள் பின் வாங்க மாட்டார்கள்.
ரிஷபம்:
ரிஷப ராசியினர் இயல்பாகவே பிடிவாத குணம் கொண்டவர்கள். அதாவது இவர்களுக்கு ஒரு விஷயம் நடக்க வேண்டும் என்றால், அதை இவர்கள் தான் தீர ஆலோசித்து முடிவு செய்வார்கள். வேறு எவரும் அவர்களை சமாதானப்படுத்த முடியாது. அதே போல், இவர்கள் படிப்பு மற்றும் தொழிலில் மிகவும் சிறந்து விளங்குபவர்கள். ஏதேனும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டால் அதை சாதித்து விட்டு தான் தூங்குவார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |