சனியின் வீட்டில் இணையும் 3 கிரகங்கள்- திரிகிரக யோகத்தால் யாருக்கு அதிர்ஷ்டம்?
ஜோதிடத்தில் ஒரே ராசியில் மூன்று கிரகங்கள் இணைவதை திரிகிரக யோகம் என்று சொல்வார்கள். இந்த யோகமானது 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சனியின் சொந்த ராசியான மகர ராசியில் நடக்க உள்ளது. அதாவது ஜனவரி 13, 2026 ஆம் ஆண்டு சுக்கிர பகவான் மகர ராசியில் பெயர்ச்சி ஆக உள்ளார்.
அதன் பிறகு ஜனவரி 14ஆம் தேதி சூரிய பகவானும் ஜனவரி 17ஆம் தேதி புதன் பகவானும் மகர ராசியில் இணைக்கிறார்கள். இதன் காரணமாக தான் மகர ராசியில் திரிகிரக யோகம் உருவாகிறது. அப்படியாக, உருவாகும் இந்த யோகத்தால் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம் உண்டாகும் என்று பார்ப்போம்.
ரிஷபம்:
ரிஷப ராசியினருக்கு இந்த யோகம் இவர்களுக்கு மிக பெரிய திருமுனையாக அமைய உள்ளது. அதாவது சனியின் சொந்த ராசியில் இந்த யோகம் உருவாக இருப்பதால் இவர்களுக்கு நினைத்து பாரத அளவு ஒரு மிகப்பெரிய நன்மையை கொடுக்க இருக்கிறது. இதன் வழியாக ரிஷப ராசியினர் தொழில் மற்றும் குடும்ப வாழ்க்கையில் நிம்மதி பெறுவார்கள். ஒரு சிலருக்கு வண்டி வாகனம் மற்றும் புதிய வீடு நிலம் வாங்கும் யோகம் உண்டாகும்.
துலாம்:
துலாம் ராசியினருக்கு இந்த யோகமானது அவர்கள் வாழ்க்கையில் ஆடம்பரமான சூழலை உருவாக்கப் போகிறது. இவர்கள் திடீர் என்று வெளிநாடு, மற்றும் வெளியூர் பயணம் சென்று மகிழ்ச்சியாக அவர்களுடைய நேரத்தை செலவு செய்வதற்கான வாய்ப்புகள் உருவாகும் தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றமும் தொழிலில் இவர்களுக்கான அங்கீகாரமும் கிடைக்க போகிறது. சமுதாயத்தில் இவர்களுக்கான மதிப்பு உயரும். நண்பர்கள் வழியாக தொழிலில் நல்ல லாபம் உண்டாகும்.
தனுசு:
தனுசு ராசியினருக்கு இந்த யோகமானது இவர்களுக்கு பொருளாதாரத்தில் ஒரு மிகப்பெரிய ஏற்றத்தை கொடுக்கப் போகிறது. வாழ்க்கையில் ஒரு மிகச்சிறந்த நாட்களை இவர்கள் சந்திக்க காத்திருக்கிறார்கள். தொழில் ரீதியாக நல்ல வருமானமும் அரசாங்க வழியே ஒரு நல்ல அனுகூலமும் இவர்கள் பெறப் போகிறார்கள். ஒரு சிலருக்கு வீடுகளை புதுப்பித்தல் அலங்காரம் செய்தல் போன்ற பணிகள் நினைத்தது போல் நிறைவேறும்.
மகரம்:
மகர ராசியினருக்கு இந்த யோகமானது இவர்களுக்கு பல வகைகளில் நன்மையை தேடி கொடுக்கப் போகிறது. புதிய வாய்ப்புகள் தொழில் ரீதியாக இவர்களுக்கு கிடைக்கும். வீடுகளில் மகிழ்ச்சியான சூழ்நிலையும் திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரணும் உயர் கல்வி மற்றும் நண்பர்களுடைய உதவி போன்றவை இவர்கள் இந்த காலகட்டங்களில் பெறப்போகிறார்கள். தந்தை வழியை இவர்களுக்கு நல்ல அனுகூலம் உண்டாக கூடிய ஒரு அற்புதமான காலகட்டமாகும் . சொத்துக்களில் இவர்களுக்கு உரிய பங்குகளை பெறப்போகிறார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |