நிகழ இருக்கும் 3 கிரக சேர்க்கையால் அமோகமான வாழ்க்கை எந்த ராசிகளுக்கு?
ஜோதிடம் என்பது கிரகங்களுடைய மாறுதல்களால் நிகழக்கூடியவை. அதாவது கிரகங்களுடைய மாறுதல்கள் நமக்கு பல்வேறு வகையான தாக்கங்களை சொந்த வாழ்க்கையிலும் தொழில் வாழ்க்கையிலும் கொடுக்கிறது. அப்படியாக வருகின்ற 2025 ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் தேதி முதல் டிசம்பர் 15ஆம் தேதி வரை விருச்சிக ராசியில் மூன்று கிரக சேர்க்கைகள் நிகழ இருக்கிறது.
அதாவது விருச்சிகத்தில் செவ்வாய், சூரியன், சுக்கிரன் பெயர்ச்சியாக உள்ளார்கள். இந்த கிரக சேர்க்கையானது எல்லா ராசிகளுக்கும் பல்வேறு வகையான தாக்கங்களை கொடுக்க உள்ளது. தொழில் வளர்ச்சி, திருமண வாழ்க்கை போன்ற அனைத்து விஷயங்களும் இவர்களுக்கு சாதகமாக நிகழ இருப்பதாக சொல்கிறார்கள்.
அப்படியாக எந்த ராசியினருக்கு இந்த 3 கிரக சேர்க்கை மிகப்பெரிய நல்ல பலன்களை கொடுக்கப் போகிறது என்று பார்ப்போம்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்கு இந்த சஞ்சாரமானது இவர்கள் வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய அளவில் ஒரு தாக்கத்தை கொடுக்க போகிறது. இவர்கள் இந்த காலகட்டத்தில் தொழில் வாழ்க்கையில் முழுமையான உழைப்பை கொடுத்து லாபம் பெறுவார்கள். அது மட்டுமல்லாமல் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த பயணம் இவர்களை தேடி வர போகிறது. சொந்தங்கள் மத்தியில் நற்பெயருடன் வாழ போகிறார்கள்.
துலாம்:
துலாம் ராசிக்கு இந்த பெயர்ச்சியானது இவர்கள் வழக்கு ரீதியாக சாதகமான சுழலல் அமையப்போகிறது. குடும்பத்தினர் இவர்களை புரிந்து நடந்து கொள்வார்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த விஷயம் இவர்களுக்கு கைகூடி வரப்போகிறது. இவர்களை துணிச்சலாக தயார் செய்து கொள்ளக்கூடிய அற்புதமான காலகட்டமாகும். திடீர் அதிர்ஷ்டம் இவர்களை தேடி வர போகிறது.
கும்பம்:
கும்ப ராசியினருக்கு இந்த காலகட்டமானது இவர்கள் தொழில் ரீதியாக முன்னேறி செல்லக்கூடிய வாய்ப்பாக அமையப் போகிறது. இவர்களை புரிந்து கொள்ளாத நபர்கள் இவர்களை விட்டு வெளியே செல்வதோடு எதிரிகள் தொல்லை முற்றிலுமாக விலகக்கூடிய அற்புதமான காலகட்டமாக ஆகும். பணம் தொடர்பான விஷயங்களில் சந்தித்து வந்த பிரச்சனைகள் விலகும். நெருங்கிய சொந்த பந்தங்கள் மத்தியில் இவர்கள் தலை நிமிர்ந்து வாழக்கூடிய காலகட்டமாகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |