இந்த 3 பொருட்கள் உங்கள் வீடுகளில் இருந்தால் தீய சக்திகள் நெருங்காது
நாம் இருக்கும் இடம் என்பது நேர்மறை ஆற்றல் கொண்டு இருக்கும் பொழுது தான் நிச்சயமாக நம் மனம் மற்றும் உடலானது ஒரு நல்ல மனநிலையில் இருக்கும். அந்த வகையில் வாஸ்து ரீதியாக நம்முடைய வீடுகளை எப்பொழுதும் தீய சக்திகளிடம் இருந்து பாதுகாப்பதற்கு சில முக்கியமான பொருட்களை வைத்திருப்பது அவசியம் என்று சொல்கிறார்கள்.
அப்படியாக குறிப்பிட்ட ஒரு 3 பொருட்களை நம் வீடுகளில் எப்பொழுதும் வைத்திருக்கும் பொழுது நிச்சயம் எந்த ஒரு தீய சக்திகளாலும் நம்மை நெருங்காமல் பார்த்துக் கொள்ளும் என்று சொல்லப்படுகிறது. அதைப்பற்றி பார்ப்போம்.

1. ஸ்ரீ சக்கரம்:
நம்முடைய வீடுகளில் ஸ்ரீ சக்கரம் வைத்திருப்பது பல வகையான துன்பங்களில் இருந்து நம்மை பாதுகாக்க கூடியதாக இருக்கும். இந்த ஸ்ரீ சக்கரத்தை நம்முடைய வீடுகளில் பூஜை அறையில் வடகிழக்கு திசையில் வைத்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
அது மட்டும் அல்லாமல் இந்த ஸ்ரீ சக்கரத்திற்கு வெள்ளிக்கிழமை தோறும் உங்களால் முடிந்த நெய்வேத்தியம் மற்றும் ரோஜா பூக்கள் சமர்ப்பித்து வழிபாடு செய்தால் உங்கள் வீடுகளை சூழ்ந்து இருக்கக்கூடிய கெட்ட அதிர்வலைகளில் இருந்து உங்களை காப்பாற்றும்.
2. துளசி செடி:
எங்கெல்லாம் துளசி செடி இருக்கிறது அங்கெல்லாம் மகாலட்சுமியின் வாசம் செய்வார். அதாவது மகாவிஷ்ணுவின் மார்பில் குடி கொண்டிருக்கும் மகாலட்சுமியின் அருட்பார்வை ஒருவருக்கு கிடைத்தால் மட்டுமே அவர்களுக்கு அதிர்ஷ்டத்தின் கதவுகள் திறக்கப்படும்.
அதனால் வீடுகளில் துளசி செடிகள் வைத்து தினமும் அதற்கு காலை மாலை நேரங்களில் விளக்கேற்றி வழிபாடு செய்தால் நிச்சயம் உங்கள் வீடுகளில் படிப்படியாக ஒரு நல்ல அதிர்வலை உருவாகுவதை காணலாம்.

3. ஸ்ரீ ஹனுமன் சாலிசா:
தடைகளை அகற்றக் கூடிய முழு வலிமை படைத்தவர் அனுமன். உங்கள் வாழ்க்கையில் தடைகள் மற்றும் நீங்கள் பாதுகாப்பின்றி உணர்கிறீர்கள் என்றால் நிச்சயம் அனுமனை வழிபாடு செய்தால் அவருடைய அருட்பார்வையால் உங்களுக்கு ஒரு வலிமையும் பிரச்சனையை போராடி சமாளிக்க கூடிய திறனும் பிறக்கும்.
அப்படியாக, வீடுகளில் ஸ்ரீ ஹனுமன் சாலிசா என்கின்ற மந்திரத்தின் படத்தை நீங்கள் மாட்டி வைக்கின்ற பொழுது நிச்சயம் அது உங்களுக்கு ஒரு பாதுகாப்பான கவசமாக அமையும். எவ்வளவு பெரிய ஆபத்தான நிலை இருந்தாலும் ஹனுமன் இறுதி நொடியில் ஆவது உங்களை வந்து காப்பாற்றக்கூடிய ஆசீர்வாதத்தை வழங்குவார்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |