மேஷ ராசியில் நுழையும் சூரியன்-3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை
சூரிய பகவானின் உச்ச ராசியான மேஷ ராசிக்குள் நுழைகிறார். இதனால் 3 ராசிக்காரர்களுக்கு மிக பெரிய மாற்றத்தை கொடுக்கப்போகிறார். பொதுவாக,சுரியன் மரியாதை, தலைமைப் பண்பு, தன்னம்பிக்கை மற்றும் ஆளுமையைக் குறிக்கிறது.
இந்த கிரகத்தின் மாற்றம் அனைத்து ராசிக்கும் மிக பெரிய தாக்கத்தை உண்டாக்கும். அதாவது,ஏப்ரல் 14, 2025 அன்று அதிகாலை 3:30 மணிக்கு சூரியன் மேஷ ராசிக்குள் நுழைகிறார். இதனால் சில ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றங்கள் நடக்க உள்ளது.
அதிலும் குறிப்பாக, மூன்று ராசிகள் தொழில் வளர்ச்சி வாழ்க்கையில் அடுத்த கட்டம் என்று எல்லாம் மிக சிறப்பாக அமைய உள்ளது.அவை எந்த ராசியினர் என்று பார்ப்போம்.
மேஷம்:
இந்த காலகட்டத்தில் உங்கள் வாழ்க்கையில் நேர்மறையான சிந்தனை தோன்றும். சிலர் முன்னோர்களின் வழிகாட்டுதலால் முன்னேற்றத்தை பெறுவார்கள். தொழிலும் உங்கள் முழு உழைப்பை போடுவதால் நல்ல லாபம் பெறுவீர்கள்.
சிம்மம்:
சூரியன் உங்கள் ராசியை ஆள்வதால், செய்யும் காரியங்களில் வெற்றிகள் குவியும். மக்கள் தொடர்பான பணியில் இருப்பவர்களுக்கு பொற்காலம் ஆகும். உங்களுடைய நீண்ட நாள் முயற்சி வெற்றி அடையும். சிலருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் தேடி வரும்.
மகரம்:
மகர ராசியினருக்கு பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கடின உழைப்பிற்கு ஏற்ப பலன்களை பெறுவீர்கள். தொழில் மற்றும் வழக்கு சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல மாற்றங்களை பெறுவீர்கள். வாழ்க்கை துணையுடன் நல்ல நேரத்தை செலவு செய்வீர்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |