மார்ச் மாதம் உருவாகும் ராஜயோகம்-இந்த 3 ராசிகளுக்கு எதிர்பாராத ஜாக்பாட்
ஜோதிடத்தில் கிரகங்ள் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்.அப்படியாக அந்த கிரகங்களின் மாற்றம் 12 ராசிகளுக்கும் ஒரு வித மாற்றத்தை கொடுக்கும்.அந்த வகையில் ஹோலி பண்டிகையான மார்ச் மாதம் 14ஆம் தேதி சில கிரகங்களின் சேர்க்கை மிகப்பெரிய மாற்றம் நிகழ்த்த போகிறது.
அதாவது சுக்கிரன் அதன் உச்ச ராசியான மீனத்தில் இருப்பதால் மாளவ்ய ராஜயோகம் உருவாகிறது. அதே நேரத்தில் சனி அதன் மூல திரிகோண ராசியான கும்பத்தில் இருப்பதால் சஷ ராஜயோகம் உருவாகிறது.
இது தவிர, சூரியன் மற்றும் புதன் இணைவு புதாதித்ய யோகத்தையும், சுக்கிரன்-புதன் இணைவு மாளவ்ய ராஜயோகத்தையும் உருவாக்குகிறது.இந்த ராஜயோகத்தால் குறிப்பிட்ட 3 ராசிகளில் மிக பெரிய மாற்றம் சந்திக்க போகிறார்கள்.
கும்பம்:
கும்ப ராசியில் லக்னத்தில் சஷ ராஜ யோகமும், இரண்டாம் வீட்டில் மாளவ்ய ராஜ யோகம் உருவாகுவதால் இவர்கள் எந்த துறையிலும் மிக பெரிய சாதனை படைக்க முடியும்.வண்டி வாகனம் பொருள் சேர்க்கும் யோகம் உருவாகும்.நீண்ட நாள் திருமண வரன் தேடுபவர்களுக்கு கட்டாயம் நல்ல வரன் அமையும். வீட்டில் உங்களுக்கான மரியாதையும் அன்பும் அதிகரிக்கும்.
மகரம்:
மகர ராசியில் ஷஷ மற்றும் மாளவ்ய ராஜயோகத்தின் செல்வாக்கு வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல அதிர்ஷ்ட யோகம் கொடுக்க காத்திருக்கிறது.குடும்ப வாழ்க்கையில் சந்தோஷமும் மகிழ்ச்சியும் உண்டாகும்.பல நாளாக அலுவலகம் மாற வேண்டும் என்று எண்ணியவர்களுக்கு கட்டாயம் நல்ல மாற்றம் நடக்கும்.இந்த கால கட்டத்தில் லட்சுமி தேவியின் ஆசீர்வாதம் கிடைக்கும்.
மிதுனம்:
மிதுன ராசியில் ஷஷ மற்றும் மாளவ்ய ராஜயோகத்தின் செல்வாக்கினால்,அவர்கள் தொழிலில் மிக பெரிய மாற்றமும் வெற்றியும் அடைவார்கள்.குடும்பத்தில் மன அமைதி உண்டாகும்.மங்களகரமான செய்திகள் உங்களை தேடி வரும்.குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |