எல்லா விஷயங்களையும் தவறாகவே புரிந்து கொள்ளும் 3 ராசிகள்.. யார் தெரியுமா?
ஒவ்வொரு மனிதர்களும் ஒவ்வொரு விதமான குண நலன்களை கொண்டவர்கள். அந்த வகையில் ஒவ்வொருவரிடத்திலும் நாம் பேசும் பொழுது மிக கவனமாக இருக்க வேண்டும். காரணம் நல்ல விதமாக நாம் ஒரு விஷயத்தை சொன்னாலும் அவர்கள் அதை தவறாக புரிந்து கொள்வார்கள். இதற்கு அவர்களுடைய ராசி அமைப்பும் ஒரு காரணமாக அமைந்துவிடுகிறது.
அதனால் இவர்களிடம் பேசும் பொழுது மிகவும் கவனமாக வார்த்தைகளை பயன்படுத்தவேண்டிய நிலை இருக்கிறது. அப்படியாக எந்த ராசியினர் எல்லா விஷயங்களையும் தவறாகவே புரிந்து கொள்ளக் கூடியவர்கள் என்று பார்ப்போம்.

கடகம்:
கடக ராசியினருடைய அதிபதி சந்திர பகவான். இவர்கள் எப்பொழுதும் ஒரே மன நிலையில் இருக்க மாட்டார்கள். ஏதேனும் சிந்தித்துக் கொண்டே இருப்பார்கள். அதேபோல் இவர்கள் மிகவும் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். சாதாரணமாக ஒரு விஷயத்தை சொன்னால் கூட அவர்கள் அதை தவறாக புரிந்து கொண்டு கோபித்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம். இவர்களிடம் பேசுவதும் இவர்களிடம் நட்பாக இருப்பதுமே சில நேரங்களில் கடினமாக இருக்கக்கூடியதாக இருக்கும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய் பகவான் ஆவார். இவர்களும் மிக எளிதாக உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். ஆக இவர்களிடத்தில் நாம் ஒரு விஷயத்தை பேசும் பொழுது பல நிலையில் ஆலோசனை செய்த பிறகு நாம் பேச வேண்டிய நிலை உள்ளது.
இல்லையென்றால் அந்த உறவுகள் முறிவதற்கான வாய்ப்புகள் அதிகம். மேலும், இவர்களுடன் பழகக் கூடியவர்கள் இவர்களை பொறுத்துச் செல்லக் கூடியவர்களாகவே இருக்க வேண்டும்.
மீனம்:
மீன ராசியினர் பொறுத்தவரை இவர்கள் யார் என்ன சொன்னாலும் அதில் ஏதேனும் குறை இருக்கிறதா என்று ஆராய்ந்து பார்ப்பதில் தான் இவர்களுடைய கவனம் இருக்கும். ஆதலால் இவர்களிடத்தில் நாம் எந்த விஷயங்கள் பகிர்ந்து கொண்டாலும் அதில் ஏதேனும் ஒரு குறைகளை சொல்லிக்கொண்டே இருப்பார்கள்.
ஆனால் இவர்கள் இடத்தில் இருக்கக்கூடிய குறைகளை நாம் சுட்டிக் காண்பிக்கும் பொழுது அவர்களால் அதை பொறுத்துக் கொள்ளவே முடியாது. இவர்களிடம் எந்த ஒரு விமர்சனம் வைக்க முடியாத ஒரு நிலையை பார்க்கலாம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |