இந்த 3 ராசிகளிடம் பேசும் பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டுமாம்? ஏன் தெரியுமா?
ஜோதிடத்தில் ஒவ்வொரு ராசி நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் இருக்கிறது. இதில் எல்லா ராசிகளும் தெளிவான ராசியாக இருந்தாலும் ஒரு சில ராசிகளை ஏமாற்றவே முடியாத அளவிற்கு எப்போதும் ஒரு விழிப்புணர்வோடு இருக்கக்கூடிய ஒரு நபராக இருப்பார்கள்.
அதைவிட அவர்கள் எப்பொழுதும் நியாயத்தையும் தர்மத்தையும் பேசுவதால் இவர்களிடம் நாம் எந்த ஒரு காரணத்தை கொண்டும் அவர்களிடம் ஒரு தவறான விஷயத்தை கொண்டு சேர்க்க முடியாது. அதனால் இவர்களிடம் நாம் பேசும்போது மிக மிக கவனமாக இருக்க வேண்டுமாம். அப்படியாக எந்த ராசியினரிடம் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.

மீனம்:
குருபகவானுடைய ஆதிக்கத்தை கொண்ட மீன ராசியினர் மிகத் தெளிவான நபராக இருக்க கூடியவர்கள். இவர்கள் ஒரு ஆசிரியர் போல் குடும்பத்திலும் தொழில் இடங்களிலும் செயல்படக்கூடியவர்கள். மீன ராசியில் பிறந்த அன்பர்கள் அன்பு கொண்டவராக இருந்தாலும் அவர்கள் அறிவான சிந்தனையோடு எப்பொழுதும் எல்லாவற்றையும் அணுகக் கூடிய ஒரு பண்பும் கொண்டவர்கள். ஆக இவர்களிடம் நீங்கள் மிகத் தெளிவாக பேசாவிட்டால் மிகப்பெரிய ஆபத்துகளில் சிக்கல் நேரலாம். மேலும் இவர்களை ஏமாற்றி விட முடியும் என்று நீங்கள் நினைத்தால் கட்டாயமாக அதுவும் பின் விளைவுகளை தான் கொடுக்கும்.
துலாம்:
துலாம் ராசியின் சின்னம் தராசு ஆகும். தராசு என்பது சமநிலையை குறிப்பது ஆகும். ஆக இவர்கள் எல்லாவற்றையும் சமநிலையோடு பார்க்கக் கூடியவர்களாக இருப்பதால் இவர்களை ஏமாற்றுவது முடியாத காரியமாக இருக்கிறது. இவர்கள் எல்லாவற்றையும் சரிசமமாக பார்த்து செயல்பட கூடியவர்கள். எல்லோருக்கும் எல்லாம் சமம் என்று இவர்களுடைய பேச்சிலும் இவர்களுடைய செயலிலும் இருப்பதால் இவர்களை நாம் எந்த இடத்திலும் ஏமாற்றவோ அல்லது தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளவும் முடியாத ஒரு காரியமாக இருக்கும்.
சிம்மம்:
சூரிய பகவானின் ஆதிக்கத்தை கொண்ட சிம்ம ராசிக்கு தலைமைத்துவ பண்பில் மிகச் சிறந்தவர்களாக இருப்பார்கள். இவர்கள் தங்களுடைய திறமையால் முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற குணம் படைத்து இருப்பார்கள். இவர்கள் எப்பொழுதும் விழிப்புணர்வோடு செயல்பட கூடியவர்கள். இவர்களிடம் நாம் ஏமாற்றவோ அல்லது இவர்களிடம் நாம் ஏதேனும் பொய் சொல்லி காரியம் சாதித்துக் கொள்ளவும் நினைக்கவே இயலாத ஒன்று. அதேபோல் சிம்ம ராசியினர் மிகவும் சுயமரியாதை கொண்டவர்களாக இருப்பதால் இவர்களை இழிவாக பேசினால் அந்த நபர் தக்க பதிலை பெற்று விடுவார்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |