இந்த ராசிகளுக்கு பணம் வந்தாலே கையில் தாங்காதாம்.. எந்த ராசியினர் தெரியுமா?
ஒரு சில ராசி அமைப்புகளை பொருத்தவரை அவர்கள் கைகளில் பணம் வந்தால் அந்தப் பணத்திற்கு ஒரு நெருக்கடியான சூழல் அல்லது செலவுகளும் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். இன்னும் ஒரு சிலர் பணம் கைகளுக்கு வந்த உடன் எப்படி அதை எப்படி செலவு செய்ய வேண்டும் என்றும் யோசித்து செலவழித்து விடுகிறார்கள்.
இப்படியாக எந்த ராசியில் பிறந்தவர்கள் கைகளில் பணம் வந்தால் அது நிலைப்பதில்லை என்பதை பற்றி பார்ப்போம்.

மேஷம்:
மேஷ ராசியை பொறுத்தவரை இவர்கள் கைகளில் பணம் வருகின்ற பொழுது அதை இவர்கள் சுதந்திரமாக செலவு செய்ய வேண்டும் என்று நினைக்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள். அதாவது யோசிக்காமல் செலவு செய்து விடுகிறார்கள்.
மிதுனம்:
இவர்கள் சேமிக்க வேண்டும் என்று நினைத்தாலும் பிரம்மாண்டமாக செலவு செய்வது என்பது இவர்களுக்கு பிடித்தமானதாக இருப்பதால் வந்த பணத்தை இவர்கள் அதிக அளவில் செலவு செய்து விடுவதையும் நாம் பார்க்க முடிகிறது.
துலாம்:
துலாம் ராசி பொருத்தவரையிலும் தங்களுக்கு தேவையான விஷயங்கள் எல்லாவற்றையும் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள்.ஆதலால் அவர்களுடைய வசதிக்கும், அழகுக்கும் அதிக செலவு செய்கிறார்கள்.
மீனம்:
இவர்கள் மிகவும் மென்மையான குணம் கொண்டவர்கள். பிறருக்காக பணம் செலவு செய்வது பற்றி இவர்கள் யோசிக்க மாட்டார்கள்.
யாரேனும் இவர்களிடம் வந்து உதவி என்று கேட்டால் யோசிக்காமல் கைகளில் இருந்து எடுத்துக் கொடுக்கக் கூடியவர்கள். அதேபோல், இவர்கள் குடும்பத்திற்காக வருகின்ற பணத்தை செலவு செய்யக் கூடியவர்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |