2025 தீபாவளி: அதிர்ஷ்டம் உண்டாக இந்த 4 பொருட்களை வாங்க தவறாதீர்கள்
இந்து மத பண்டிகைகளில் தீபாவளி என்பது மிக முக்கியமான பண்டிகையாகும். தீபாவளி பண்டிகையின் பொழுது பலரும் வீடுகளில் இனிப்புகள் செய்தும் வீடுகளை அலங்காரம் செய்தும் விழாவை குடும்பத்துடன் சிறப்பாக கொண்டாடுவார்கள்.
அப்படியாக இந்த தீபாவளி பண்டிகையின் பொழுது நம் வீடுகளில் செல்வம் மற்றும் அதிர்ஷ்டம் சேர குறிப்பிட்ட சில 4 பொருட்களை வாங்கி வைப்பதால் நம் வீடுகளில் நன்மை உண்டாகும் என்கிறர்கள். அவை என்ன பொருட்கள் என்று பார்க்கலாம்.
1. தீபாவளி பண்டிகையின் பொழுது வீடுகளில் யானைகளின் சிலை வாங்கி வைப்பதால் வீட்டில் உள்ள பொருளாதார உயரும் என்று சொல்லப்படுகிறது. பொதுவாக இந்து மதத்தில் யானை என்பது விநாயகர் ஓடு தொடர்பு படுத்தி பார்ப்பதால் விநாயகர் தடைகளை போக்கி நம்முடைய குடும்பத்திற்கு அருளை வழங்குபவராக இருக்கிறார். ஆதலால் கட்டாயம் தீபாவளி பண்டிகையின் பொழுது யானை சிலையை வாங்கி வைப்பதால் நம் வீடுகளில் அதிர்ஷ்டம் உண்டாகுமாம்.
2. தீபாவளி பண்டிகையின் பொழுது ஆமை சிலைகளை வீடுகளில் வாங்கி வைப்பதால் நமக்கு நிலையான வருமானமும், ஆரோக்கியத்தில் முன்னேற்றமும் உண்டாகுமாம். அதோடு வீடுகளில் ஏற்பட்ட கஷ்டங்கள் விலகி குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிப்பதாக சொல்கிறார்கள். மேலும் வாஸ்துரீதியாகவும் ஆமை சிலையை வீடுகளில் வைப்பது தீய சக்திகளை போக்கி நேர்மறை ஆற்றலை பெருக்குவதாக சொல்கிறார்கள்.
3. அதேபோல் தீபாவளி பண்டிகைக்கு ஆந்தை சிலை வாங்கி வைப்பதால் நம் வீடுகளில் லட்சுமி தேவியின் அருள் கிடைக்கும் என்கிறார்கள். ஆந்தை வாஸ்து சாஸ்திரத்தில் உமக்கு அதிர்ஷ்டத்தையும் புதிய வாய்ப்புகளையும் தேடி கொடுப்பதாக சொல்லப்படுகிறது. ஆதலால் ஆந்தை சிலை வாங்கி வைப்பதால் நம் வீட்டில் நல்ல தொடக்கமாகவும் புதிய பாதை பிறக்கும் என்றும் சொல்கிறார்கள்.
4. மேலும் தீபாவளி பண்டிகையின் பொழுது குதிரை சிலையை வாங்கி வைக்கும் பொழுது நாம் நினைத்த லட்சியத்தை அடைவதற்கான வாய்ப்புகள் பிறக்கும் என்கிறார்கள். குதிரை சிலையை வீடுகளில் வைக்கும் பொழுது குடும்பத்தினர் உடைய நம்பிக்கையும் குடும்பத்தில் மகிழ்ச்சியும் எதையும் சாதிக்கும் தைரியமும் பிறக்கும் என்கிறார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







