யோசிக்காமல் உதவி செய்யக்கூடிய இரக்க குணம் கொண்ட ராசிகள் யார் தெரியுமா?
பொதுவாக, நம்முடைய இந்து மதத்தில் ஜோதிடத்தை நாம் அதிக அளவில் நம்புவது உண்டு. அதாவது கிரகங்களை வைத்து நம்முடைய எதிர்காலங்களை கணித்து தெரிந்துக் கொண்டு, வரக்கூடிய பிரச்சனைகளை சமாளிக்க நாம் தயார் நிலையில் வைத்துக் கொள்ள உதவக்கூடிய ஒரு அற்புதக் கலையாக இருக்கிறது.
அப்படியாக, மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான குணங்கள் உண்டு. அதாவது ஒரு சிலர் மிகுந்த இரக்க குணத்தோடு இருப்பார்கள். ஒரு சிலர் கோபத்தோடு இருப்பார்கள். ஒரு சிலரிடம் மன்னிக்கும் குணமே இருக்காது. ஆக மனிதர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையாக இருக்கிறார்கள்.
இதற்கு காரணம் அவர்களுடைய ராசியில் அதிபதியும் அவர்கள் ஜாதகத்தில் அமைந்திருக்கக்கூடிய கிரகங்களும் தான். அப்படியாக, ஒரு சில ராசிகளை வைத்து அந்த நபரின் உடைய குணங்களை நாம் தெரிந்து கொள்ளலாம்.
அவ்வாறு பார்க்கின்ற பொழுது எந்த ராசியில் பிறந்தவர்களுக்கு இரக்க குணம் அதிகம் இருக்கும்? யார் சுயநலமாக யோசிக்காமல் உதவக்கூடியவர்கள் என்பதை பற்றி பார்ப்போம்.

ஜோதிடத்தில், குருபகவான் ஜோதிடத்தில் சுப கிரகமாக இருக்கிறார். அது மட்டுமல்லாமல் அவர்தான் ஒரு மனிதனை ஆசிரியரை போல் வழிநடத்தக் கூடியவர்கள். ஆக, குரு பகவான் ஆதிக்கத்தை கொண்ட ராசிகளாக இருக்கும் தனுசு மற்றும் மீன ராசியினர் எப்பொழுதும் இரக்கு குணம் கொண்டவர்கள்.
இவர்கள் எல்லா விஷயங்களையும் பற்றி நன்கு ஆராய்ந்து பிறகு முடிவெடுக்க கூடியவர்கள். ஆக, இவர்களிடம் சென்று நாம் உதவி என்று கேட்டால் நிச்சயம் இல்லை என்று நாம் திரும்ப மாட்டோம்.
அதேபோல் சுக்கிர பகவானின் ஆதிக்கத்தை கொண்ட ரிஷபம் துலாம் ராசியினர் இடையே நாம் அதிக அளவில் இரக்க குணம் இருப்பதை பார்க்கலாம். இவர்களும் ஒருவருடைய கஷ்டத்தை தங்களுடைய கஷ்டம் போல் எண்ணி அவர்களுக்காக மனம் வருந்துபவர்கள். அவர்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை முன் சென்று செய்யக்கூடியவர்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |