திருமணத்திற்கு பிறகு இந்த ராசிகளுக்கு வாழ்க்கை அழகாக மாறிவிடுமாம்.. யார் ?தெரியுமா ?
ஒரு சிலருக்கு திருமணத்திற்கு பிறகு தான் வாழ்க்கை அமோகமாக மாறுவதை நாம் பார்க்கலாம். அதாவது மிகப்பெரிய அளவில் இவர்கள் உயர்ந்த நிலைக்கு திருமணத்திற்கு பிறகு தான் செல்வார்கள். இதற்கு அவர்களுடைய ராசி அமைப்பு காரணமாக இருக்கிறது.
அந்த வகையில், எந்த ராசியில் பிறந்தவர்களுக்கு திருமணத்திற்கு பிறகு அழகான வாழ்க்கை அமையும் என்பதை பற்றி பார்ப்போம்.

ரிஷபம்:
இவர்களுக்கு திருமணத்திற்கு பிறகு தான் ஒரு பிடிப்பு உண்டாகும். அதாவது வாழ்க்கை என்றால் என்ன என்பதை புரிந்து கொண்டு துணையுடன் உயர்ந்த நிலைக்கு செல்லக்கூடிய நிலை உருவாகிறது.
கடகம்:
வாழ்க்கையை பிடிக்காமல் வாழ்ந்தவர்களுக்கு வாழ்க்கை துணை கிடைத்தவுடன் எல்லாம் மாறக்கூடிய நிலை உருவாகும். இவர்கள் வாழ்க்கை துணையின் காதலால் திருமணத்திற்கு பிறகு நிறைய விஷயங்களை செய்து மகிழ்வதால் வாழ்க்கை அழகாக மாறுகிறது.
சிம்மம்:
இவர்கள் எதற்கெடுத்தாலும் சண்டை போடக்கூடிய குணம் படைத்தவர்கள். ஆனால் திருமணத்திற்கு பிறகு இவர்கள் துணையின் அன்பும் ஆதரவால் சண்டையை குறைத்து விடுவார்கள். இவர்கள் திருமணத்திற்கு முன்பு எப்படி இருந்தார்களோ பின்பு வேறு ஒரு மனிதனாக மாறக்கூடிய அழகான வாழ்க்கை அமைகிறது.
துலாம்:
இவர்களுக்கு திருமணத்திற்கு பிறகு தான் துணையின் காதலால் இவர்கள் வாழ்க்கை அமோகமாகிறது, இவர்களுக்கு காதலும் அன்பும் கிடைத்து அவர்களுடைய வாழ்க்கையை ரசித்தும் சுவாரசியமாகவும் வாழ தொடங்குகிறார்கள். இதனால் இவர்கள் வாழ்க்கை திருமணத்திற்கு பிறகு மிகவும் அழகாக பிறகு மாறுகிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |