விதியை வெல்ல பாட வேண்டிய சக்தி வாய்ந்த பாடல்.. நிச்சயம் மாற்றம் உண்டு..
திருக்கடையூரில் அருள்பாலிக்கக்கூடிய அபிராமி அம்மன் மீது அளவு கடந்த அன்பின் காரணமாக அபிராமி பட்டர் இயற்றிய நூறு பாடல்களின் தொகுப்பாகவே இந்த அபிராமி அந்தாதி விளங்குகிறது.
அம்மனின் பரிபூரண அருள், பக்தியின் மகிமை சரணாகதி, இறை நம்பிக்கை, ஆன்மீக ஞானம் போன்ற பல்வேறு கருத்துகளை கொண்ட இந்த அபிராமி அந்தாதி பக்தர்களால் மனம் உருகி பாராயணம் செய்கின்ற பொழுது அபிராமியின் அருளால் அவர்களுக்கு வாழ்க்கையில் எல்லா செல்வமும் கிடைக்கிறது.
குறிப்பாக துன்பப்படும் வேளையில் எவர் ஒருவர் மனம் உருகி அபிராமி அந்தாதியை பாராயணம் செய்கிறார்களோ அவர்களுக்கு இறைவனுடைய அருளாசியால் துன்பம் நொடிப்பொழுதில் விலகும். அந்த வகையில், விதியை மாற்றக்கூடியமாற்றக்கூடிய அபிராமி அந்தாதி பாடலை பார்ப்போம்.

இதை தினமும் மனம் உருகி அபிராமி அன்னையை மனதில் நினைத்து பாராயணம் செய்து வர நிச்சயம் கர்ம வினையும் விதியின் தீய தாக்கம் குறையும்.
பாடல்கள்:
வாணுதல் கண்ணியை, விண்ணவர் யாவரும் வந்திறைஞ்சிப்
பேணுதற்கு எண்ணிய எம்பெருமாட்டியைப் பேதைநெஞ்சில்
காணதற்கு அண்ணியள் அல்லாத கன்னியைக் காணும்
அன்பு பூணுதற்கு எண்ணிய எண்ணமன்றோ முன்செய் புண்ணியமே.
இந்த பாடலை நீங்கள் தினமும் மனம் உருகி பாடி வரும் பொழுது மனதில் ஒரு எளிமையை உணர முடியும், அன்னை உங்கள் அருகில் வந்து அமர்ந்து உங்களிடமே பேசுவதைப் போல் நிச்சயமாக உணர முடியும். அதைவிட, முக்கியமாக விதி சூழ்ந்து துன்பப்படுகின்ற பொழுது அன்னையினுடைய அருட்பார்வை உங்கள் மீது விழுந்து எல்லாம் நொடிப்பொழுதில் மாறுகின்ற அந்த மாயாஜாலத்தையும் பார்க்க முடியும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |