மேஷம் முதல் மீனம் வரை எந்த ராசிக்கு இளம் வயதிலே திருமணம் நடக்கும்?
ஜோதிட ரீதியாக ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு குணாதிசயம் இருக்கும். மேலும், அந்த ராசியை பொறுத்து தான் அவர்களுடைய திருமண வாழ்க்கை படிப்பு போன்றவை அமைகிறது. அந்த வகையில், எந்த ராசிகள் பிறந்தவர்களுக்கு இளம் வயதிலேயே திருமணம் நடக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.
ஒருவர் ஜாதகத்தில் செவ்வாய் மற்றும் சுக்கிரன் இணைந்து இருந்தால் அவர்களுக்கு ஒரு இனிமையான இல்லற வாழ்க்கை அமையும். ஆதலால், இவர்களுக்கு பெரும்பாலும் இளம் வயதிலேயே திருமணம் நடப்பதற்கான யோகம் உண்டு.
அதேபோல், சுக்கிரன் அல்லது செவ்வாய் போன்ற கிரகங்கள் வக்கிரம் பெற்றிருந்தாலும் அவை 5,7, 3 இடங்களில் தொடர்பு கொள்ளும் பொழுதும் அவர்களுக்கு விரைவில் திருமண நடக்கும். மேலும், ஜோதிடத்தில் மூன்றாம் இடம் என்பது மறைவு ஸ்தானம் என்று சொல்லப்படுகிறது.
இந்த மூன்றாம் இடத்தில் ராகு செவ்வாய் சனி போன்ற கிரகங்கள் சுக்கிரனுடன் சேரும் பொழுது இளம் வயதிலேயே இவர்களுக்கு திருமணம் உண்டாகுவதற்கான வாய்ப்பு உண்டு.
மேலும், மேஷ ராசிக்கு மிதுனத்தில் சுக்கிரன் இருப்பதும் ரிஷப ராசிக்கு விருச்சிகத்தில் சுக்கிரன் இருப்பதும் இவர்களுக்கு இளம் வயதில் திருமணம் தொடர்பான விஷயங்கள் விரைவில் கைக்கூடிவரும்.
அதைவிட முக்கியமாக ஏழாம் வீட்டில் குரு மற்றும் ராகு சேரும்போது உருவாகக்கூடிய குரு சண்டாள யோகம் சொந்த ஊரை விட்டு வெளியே அல்லது வெளிநாடுகளில் திருமணம் நடப்பதற்கான வழி வகுக்கும். மேலும், யாருக்கு ஜோதிடத்தை ரீதியாக விரைவில் திருமணம் நடக்கும் என்பதை பற்றி இந்த காணொளி பார்த்து தெரிந்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |