தொழில் ரீதியாக கொடிக்கட்டி பறப்பதற்கு நியூமராலஜி டிப்ஸ் இதோ..
தொழில் தொடங்குவது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. ஒவ்வொரு தொழிலையும் துவங்குவதற்கு முன்னால் பல யோசனைகளையும் ஆராய்ச்சிகளையும் செய்ய வேண்டியது அவசியம். அந்த வகையில், தொழில் தொடங்கும் பொழுது ஜோதிட ரீதியாக நாம் சில விஷயங்களை பின்பற்றினால் நிச்சயம் அவை நமக்கு கை கொடுக்கும் என்று நம்பப்படுகிறது. அதை பற்றி பார்ப்போம்.
ஒரு தொழில் நிறுவனத்தின் அடையாளமாக அவர்களுடைய பெயர் மற்றும் லோகோ விளங்குகிறது. ஆதலால், அதனை சரியான எண் கணித மதிப்புகளின் படி அமைப்பது மிகப்பெரிய அளவில் வெற்றியை பெற்றுக் கொடுக்கும்.
அதே போல், வணிகங்களுக்கு எண் ஐந்து மிகவும் சிறப்பானதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக வாடிக்கையாளர்களுடன் நேரடி தொடர்பு கொண்ட தொழில்களுக்கு இந்த எண் வெற்றியை கொடுக்கும். இந்த இடங்களில் 26, 29, 38 போன்ற எண்களை தவிர்ப்பது நல்லது.
தொழில் ரீதியாக நாம் லோகோவில் மஞ்சள் நிறங்களை பயன்படுத்துவது நமக்கு சிறப்பை பெற்றுக் கொடுக்கும். அதனை சிவப்பு நிறத்துடன் இணைப்பது இன்னும் கூடுதல் பலம் உண்டாக்கும். முடிந்தவரை குடும்ப உறுப்பினர்களுடைய பெயரையோ அல்லது குழந்தைகளின் உடைய பெயர்களையோ நிறுவனங்களுக்கு வைப்பதை தவிர்க்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.
பொதுவாக, தொழில் தொடங்கும் பொழுது அல்லது வங்கி கணக்கு துவங்கும் பொழுது அந்த தேதியும் எண் கணிதப்படி சரியாக இருக்கிறதா என்று ஆலோசித்துக் கொள்வது அவசியம். மேலும், சில விஷயங்களை இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |