நாளைய ராசிபலன் (12-09-2026)
மேஷம்:
திடீர் வெளியூர் பயணம் செல்வதற்கான வாய்ப்புகள் உருவாகலாம். வெளிநாடு தொடர்பான விஷயங்களில் இருந்து வந்த குழப்பங்கள் விலகும்.
ரிஷபம்:
வருமானம் உயர்த்துவதை பற்றி ஆலோசனை செய்வீர்கள். சொந்தங்கள் மத்தியில் தலைநிமிர்ந்து நடக்கக்கூடிய நாள். உடன் பிறந்தவர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவீர்கள்.
மிதுனம்:
இன்று உங்களுடைய வாழ்க்கை ரீதியாக ஒரு முக்கியமான முடிவு எடுப்பதற்கு தள்ளப்படுவீர்கள். திருமண வாழ்க்கையில் இருந்து வந்த கசப்புகள் விலகும்.
கடகம்:
நண்பர்களைப் பற்றிய ஒரு புரிதல் உண்டாகும். சொந்தங்களால் ஏற்பட்ட மன கஷ்டங்கள் விலகும். வேலையில் முன்னேற்றம் உண்டு. பொருளாதாரம் நெருக்கடிகள் சமாளிக்க வழி பிறக்கும்.
சிம்மம்:
வியாபார ரீதியாக இன்று யாரிடமும் வாக்குறுதிகளை கொடுக்காதீர்கள். தாய் உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். வழக்கு விஷயங்கள் சில குழப்பங்களை பெறலாம்.
கன்னி:
எதிர்கால வாழ்க்கையை பற்றிய பயம் வரலாம். சுற்றி உள்ளவர்களை பற்றிய முழுமையான புரிதல் கிடைக்கும். சொத்து விவகாரங்களில் கவனம் வேண்டும்.
துலாம்:
இன்று வேலைப்பளு அதிகரிக்கும். உடல் ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும். பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தினர் உங்களை புரிந்து நடந்து கொள்வார்கள்.
விருச்சிகம்:
வெளிநாடு செல்ல வேண்டும் கனவுகள் நிறைவேற கூடிய நாள். வாழ்க்கை துணையின் முழு அன்பும் ஆதரவும் பெறுவீர்கள். உறவினர்களை சந்திப்பீர்கள்.
தனுசு:
பிள்ளைகள் பற்றிய தெரிந்து கொள்வீர்கள். பிள்ளைகள் எதிர்காலத்திற்காக சில மாற்றங்களை செய்து கொடுப்பீர்கள். வழக்கு விஷயங்களில் இருந்த பின்னடைவுகள் சரியாகும்.
மகரம்:
இன்று வேலை ரீதியாக நீங்கள் ஒரு முக்கியமான இடத்திற்கு செல்ல நேரலாம். விலை உயர்ந்த பொருட்கள் மீது கவனம் செலுத்த வேண்டும். வாழ்க்கை துணையால் ஆதரவு கிடைக்கும்.
கும்பம்:
சட்டத்துறையில் இருப்பவர்கள் என்று சற்று கவனமாக இருக்க வேண்டும். குடும்பங்களில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். வியாபாரம் தொடர்பாக முக்கியமான நபரை சந்திப்பீர்கள்.
மீனம்:
இன்று சொத்து விஷயங்களில் சில முக்கியமான முடிவுகளை எடுக்க நேரலாம். எதிர்பார்த்த செய்திகள் வந்து சேரும். வேலையில் நினைத்த இடமாற்றம் உண்டு.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |